ஒருநாள் உலகக்கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கான் வீரர் என்ற சாதனை படைத்த இப்ராஹிம் சத்ரான்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பையில் இப்ராஹிம் சத்ரான் 129 ரன்கள் குவித்து, ஒருநாள் உலகக்கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கான் கிரிக்கெட் அணி வீரர் என்ற சாதனை படைத்தார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் அவர் சதம் அடித்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ரஹ்மானுல்லா குர்பாஸ் வெளியேறிய பிறகு, 21 வயதான அவர் நிலைத்து நின்று ரன் குவித்தார்.
மேலும், இப்போட்டியில் சதமடித்ததன் மூலம் ஆப்கானிஸ்தானின் அதிகபட்ச ஒருநாள் உலகக்கோப்பை தனிநபர் ஸ்கோரை அடித்திருந்த சமியுல்லா ஷின்வாரியை (96) விஞ்சினார்.
உலகக் கோப்பையில் 90-க்கும் அதிகமான ஸ்கோரைப் பெற்ற ஒரே ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் சத்ரான் மற்றும் ஷின்வாரி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
Ibrahim Zadran becomes first afghanistan player to score Century in CWC
இப்ராஹிம் சத்ரான் புள்ளி விபரங்கள்
இந்த சதம் இப்ராஹிம் சத்ரானுக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் ஐந்தாவது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டாவது அதிக சதமடித்த ஆப்கானிஸ்தான் வீரர் ஆனார்.
ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் ரஹ்மத் ஷாவுடன் ஆகியோரும் தலா 5 சதங்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், முகமது ஷாஜாத் 6 சதங்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
வேறு எந்த ஆப்கானிஸ்தான் பேட்டரும் இரண்டு ஒருநாள் சதங்களுக்கு மேல் அடித்தது இல்லை.
மேலும், ரஹ்மத்துடன் (2018 இல் ஏழு) ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக சத்ரான் இப்போது அதிக முறை ஐம்பதுக்கும் அதிகமான ஸ்கோரை (2023 இல் ஏழு) பெற்றுள்ளார்.