
ஒருநாள் உலகக்கோப்பை: இந்தியாவுடன் அரையிறுதியில் மோதும் அணி எது? போட்டியில் நான்கு அணிகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
இதில் இந்திய கிரிக்கெட் அணி புள்ளிப்பட்டியலில் யாரும் எட்டமுடியாத வகையில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது.
இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் உள்ள நிலையில், இந்த அணிகளின் எஞ்சிய ஒரு போட்டியின் முடிவுக்கு பிறகு மாற்றங்கள் இருக்கலாம்.
எனினும் இந்த இரு அணிகளில் ஒன்று இரண்டாம் இடத்திலும், மற்றொன்று மூன்றாவது இடத்திலும் நிறைவு செய்யும் என்பதால், அரையிறுதியில் இந்த இரு அணிகளுமே தங்களுக்குள் மோத உள்ளன.
மறுபுறம் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் எந்த அணி விளையாடும் என்ற விவாதம் எழுந்துள்ளது.
4 teams are competing for semi final berth
நான்காவது இடத்திற்காக போட்டி போடும் நான்கு அணிகள்
இந்தியா புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம் பிடிக்கும் அணியுடன் அரையிறுதியில் மோத உள்ள நிலையில், நான்காவது இடத்திற்கு நான்கு அணிகள் போட்டியில் உள்ளன.
தற்போதைய நிலையில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தலா 8 புள்ளிகளுடன் உள்ளன.
இந்த மூன்று அணிகளில் எந்த அணி தங்கள் கடைசி போட்டியில் வெல்கிறதோ அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
மூன்று அணிகளுமே வெற்றி பெற்றால் நிகர ரன் ரேட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதே நேரத்தில் இந்த மூன்று அணிகளும் தங்கள் போட்டியில் தோற்று, நெதர்லாந்து கிரிக்கெட் அணி தங்களது எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால், அந்த அணியும் அரையிறுதியில் நுழைய வாய்ப்புண்டு.