NED vs AFG: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நெதர்லாந்து
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 34வது போட்டியில் இன்று ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோதிக் கொள்ளும் முதல் போட்டி இது. இன்றைய போட்டிக்கான டாஸை வென்ற தெர்தலாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். நெதர்லாந்து அணியின் சார்பாக வீஸ்லி பர்ரேசி மற்றும் மேக்ஸ் ஓடவுடு ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். முஜீப் உர் ரஹ்மானின் பந்துவீச்சிற்கு வீஸ்லி முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க, மேக்ஸ் ஓடவுடு சற்று நிதானமாக ஆடி 42 ரன்களைக் குவித்தார். அதன்பிறகு இறங்கிய காலின் ஆக்கர்மேன் மற்றும் சைபிராண்டு எங்கள்பிரெட்ச் ஆகிய இருவரும் நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சொதப்பிய பின்வரிசை பேட்டர்கள்:
நெதர்லாந்தின் டார் ஆர்டர் வீரர்கள் ஆட்டமிழந்த பின்பு, அந்த அணியின் பின்வரிசை பேட்டர்களால் ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. பின் வரிசை பேட்டர்களில் ரோல்ஃப் வான் டர் மெர்வீ மட்டுமே அதிகபட்சமாக 11 ரன்களைக் குவித்தார். மற்ற அனைவரும் மிகச்சொற்ப ரன்களுக்கே ஆட்டமிழந்தனர். ஆஃப்கானிஸ்தானின் முகமது நபி மற்றும் நூர் அகமது ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் டார் ஆர்டர் பேட்டர்கள் அனைவரும் ரன் அவுட் ஆகியே விக்கெட்டுகளை இழந்திருக்கின்றனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் 46.3 ஓவர்களில் 179 ரன்கள் குவிப்பிற்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நெதர்லாந்து. ஆஃப்கானிஸ்தானுக்கு 180 ரன்கள் இலக்காக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.