இலங்கை vs நியூசிலாந்து ஒருநாள் உலகக்கோப்பை : வெல்லப்போவது யார்? கடந்தகால புள்ளி விபரங்கள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் லீக் சுற்றில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 9) நடைபெறும் 41வது ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும் நான்காவது அணியாக மாற அதிக வாய்ப்புண்டு.
மறுபுறம், இலங்கையை பொறுத்தவரை கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக பெற்ற தோல்வியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.
இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 101 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், நியூசிலாந்து 51 வெற்றிகளை பெற்று முன்னிலையில் உள்ளது.
இலங்கை 41 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டி டை ஆனது மற்றும் 8 போட்டிகளில் முடிவுகள் எதுவும் இல்லை.
ODI World Cup SLvsNZ Statistical preview
ஒருநாள் உலகக்கோப்பையில் நேருக்குநேர் மோதல்
ஒருநாள் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இரு அணிகளும் 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி 6 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டி நடக்கும் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்தின் 401/6 ரன்களே இங்கு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ஸ்கோர் ஆகும்.
இலங்கைக்கு எதிராக இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து எடுத்த 156/10 மிகவும் குறைந்த ஸ்கோராகும்.
இலங்கை இந்த தொடரில் படுதோல்வியை சந்தித்து மோசமான நிலையில் இருந்தாலும், 2023 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக 21 விக்கெட்டுகளுடன் தில்ஷன் மதுஷங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.