NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்
    இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

    Sports Round Up : ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஹாக்கி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி; மேலும் பல முக்கிய செய்திகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Nov 05, 2023
    08:34 am

    செய்தி முன்னோட்டம்

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை (நவம்பர் 4) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    முன்னதாக, போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் ராச்சின் ரவீந்திரா 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 95 ரன்களும் குவித்ததன் மூலம், அந்த அணி 401 ரன்கள் எடுத்தது.

    பாகிஸ்தான் அணியின் ஃபகார் ஜமான் 126 ரன்களுடனும், பாபர் அசாம் 66 ரன்களுடனும் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களுடன் இருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    England knocked out of CWC 2023 Semifinal after loss with Australia

    ENGvsAUS ஒருநாள் உலகக்கோப்பை : ஆஸ்திரேலியாவிடம் தோல்வி; அரையிறுதி வாய்ப்பை இழந்து இங்கிலாந்து

    ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.

    முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது.

    மார்னஸ் லாபுசாக்னே அதிகபட்சமாக 71 ரன்கள் எடுத்தார். கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து, பென் ஸ்டோக்ஸ் மற்றும் டேவிட் மாலன் அரைசதங்கள் அடித்த நிலையிலும், 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 253 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, இங்கிலாந்து கிரிக்கெட் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.

    India women's hockey team enters final in ACT 2023

    ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

    சனிக்கிழமை ஜார்க்கண்டில் நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி தென்கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியில் முதல் பாதியில் சலிமா டெட்டே மற்றும் வைஷ்ணவி வித்தல் தலா ஒரு கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தனர்.

    இரண்டாவது பாதியில், தென்கொரியா கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில், இறுதியில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஜப்பானை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.

    மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை பொறுத்தவரை இந்தியா இதற்கு முன்பு 2016இல் ஒரே ஒருமுறை மட்டும் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

    Indian junior hockey team won bronze in Sultan of Johor Cup

    சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய ஜூனியர் ஹாக்கி அணி

    சனிக்கிழமை நடைபெற்ற சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பையில் இந்தியவின் ஜூனியர் ஆடவர் ஹாக்கி அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் பாகிஸ்தானை தோற்கடித்து வெண்கலம் வென்றது.

    நடப்பு சாம்பியனான இந்தியா, அரையிறுதியில் ஜெர்மனியிடம் 3-6 என்ற கணக்கில் தோல்வியடைந்த நிலையில், வெண்கலத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்த நிலையில், பெனால்டி ஷுட் அவுட் முறையில் இந்தியா பாகிஸ்தானை 6-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்திய ஜூனியர் ஹாக்கி அணி அடுத்து டிசம்பர் 5 முதல் 16 வரை கோலாலம்பூரில் நடைபெறும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவுள்ளது.

    Indian F4 Championship Akshay Bohra wins in 1st game

    சென்னையில் நடந்த முதல் இந்தியன் எஃப்4 ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அக்ஷய் போஹ்ரா வெற்றி

    இந்திய பந்தய திருவிழாவின் இரண்டாவது சீசனின் ஒரு பகுதியாக மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் முதல் இந்திய எஃப்4 சாம்பியன்ஷிப் சனிக்கிழமை தொடங்கியது.

    ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் நடத்தப்படும் இந்த தொடர் இந்தியன் எஃப்4 மற்றும் இந்தியன் ரேசிங் லீக் என இரண்டு சாம்பியன்ஷிப்களைக் கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய பந்தய திருவிழாவின் இரண்டாவது சீசனின் ஒரு பகுதியாக மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த முதல் இந்திய எஃப்4 சாம்பியன்ஷிப்பில் அக்ஷய் போஹ்ரா பந்தயத்தை வென்றார்.

    இந்தத் தொடரின் தொடக்கச் சுற்று முதலில் ஹைதராபாத் தெரு சர்க்யூட்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

    ஆனால், தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும் போட்டி கடைசி நேரத்தில் சென்னைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒருநாள் உலகக்கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    இந்திய ஹாக்கி அணி

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஒருநாள் உலகக்கோப்பை

    AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயம் ஆப்கான் கிரிக்கெட் அணி
    AFGvsSL : ஒருநாள் உலகக்கோப்பையில் முதல் முறையாக 4 விக்கெட் வீழ்த்திய ஃபசல்ஹாக் ஃபரூக்கி ஆப்கான் கிரிக்கெட் அணி
    AFGvsSL ஒருநாள் உலகக்கோப்பை : 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி ஆப்கான் கிரிக்கெட் அணி
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆப்கான் கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    இந்தியாவின் அசத்தலான விருந்தோம்பலில் திளைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி; வைரலாகும் காணொளி ஒருநாள் உலகக்கோப்பை
    PAKvsNED ஒருநாள் உலகக்கோப்பை : டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் உலகக்கோப்பை
    PAKvsNED : நெதர்லாந்தின் பந்துவீச்சில் திணறிய பாகிஸ்தான்; 286 ரன்களுக்கு ஆல் அவுட் ஒருநாள் உலகக்கோப்பை
    PAKvsNED : 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் ஒருநாள் உலகக்கோப்பை

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்; ஒரு ஐபிஎல் போட்டியில் கூட விளையாடாத பின்னணி தெரியுமா? டெஸ்ட் கிரிக்கெட்
    ஆஷஸ் 2023 : சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கர்
    'இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டேன்' : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி உறுதி டெஸ்ட் கிரிக்கெட்
    இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு கிரிக்கெட்

    இந்திய ஹாக்கி அணி

    ஆஸ்திரேலிய 'ஏ' அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் ஹாக்கி அணி! ஹாக்கி போட்டி
    ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா! ஆசிய கோப்பை
    எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் நெதர்லாந்திடம் இந்தியா தோல்வி ஹாக்கி போட்டி
    ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையில் 11 கோல்கள் அடித்து இந்தியா அபார வெற்றி ஹாக்கி போட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025