INDvsSA ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கு மழையால் ஆபத்தா? வானிலை அறிக்கை சொல்வது இதுதான்
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் 37வது போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் 7 போட்டிகளில் பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியைத் தழுவிய நிலையில் 7இல் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளதால், இந்த போட்டியின் வெற்றி தோல்வியால் எந்த அணிக்கும் பாதகமில்லை.
INDvsSA ODI World Cup weather forecast
இந்தியா vs தென்னாப்பிரிக்கா வானிலை முன்னறிவிப்பு
ஈடன் கார்டனில் ஏற்கனவே நெதர்லாந்து vs பங்களாதேஷ் மற்றும் வங்கதேசம் vs பாகிஸ்தான் ஆகிய இரண்டு போட்டிகள் நடந்துள்ள நிலையில், இது மூன்றாவது போட்டியாகும்.
போட்டி நடைபெறும் நாளில் வானிலை முன்னறிவிப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி நிறைய பேச்சுக்கள் உள்ளன.
weather.com படி, ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் மழை பெய்ய 10% மட்டுமே வாய்ப்பு உள்ளது. எனவே, போட்டி முழுமையான நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
இருப்பினும், ஈரப்பதம் 60 முதல் 70% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அது இரு அணிகளுக்கும் ஒரு சிறிய சவாலாக மாறக்கூடும்.
இதற்கிடையே, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்த தொடரில் ஒருமுறை கூட தோல்வியடையாத இந்தியாவை வீழ்த்த முழு முனைப்புடன் தயாராகி வருகிறது.