LOADING...
ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி
ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 29, 2025
06:17 pm

செய்தி முன்னோட்டம்

ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தித் த்ரில் வெற்றி பெற்ற நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்றுக் கிரிக்கெட் போட்டி மீண்டும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பையின் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இறுதிப் போட்டியில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். துபாயில் நடந்த இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு ஆடிய இந்தியா, திலக் வர்மாவின் ஆட்டமிழக்காத 69 ரன்கள் உதவியுடன் 19.4 ஓவர்களில் 150/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியப் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிப் பாகிஸ்தானின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

மகளிர் கிரிக்கெட்

ஒருநாள் மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை

ஆசிய கோப்பை முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 30 முதல் மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் ஹைபிரிட் முறையில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக செப்டம்பர் 30 அன்று மோத உள்ளது. மேலும், இந்தியா vs பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 5 அன்று கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர்கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையிலும் இது தொடரும் என இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.