LOADING...
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி
மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி

எழுதியவர் Sekar Chinnappan
Nov 01, 2025
05:35 pm

செய்தி முன்னோட்டம்

மகளிர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வராதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டிக்குக் கட்டணச் சீட்டுகளை விற்பனை செய்ய அதிகாரப்பூர்வ டிக்கெட் பங்குதாரரான புக்மைஷோ தொடர்ந்து தாமதம் செய்வதை ரசிகர்கள் மோசமான திட்டமிடல் மற்றும் நிர்வாகக் குறைபாடு என்று சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை புக்மைஷோ இணையதளம் நேற்றுவரை 'விரைவில் வெளியாகும்' என்று காட்டி வந்த நிலையில், இன்று திடீரென நிகழ்வுக்கான முன்பதிவைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டது.

டிக்கெட்டுகள்

டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம்

இந்தியாவின் அரையிறுதிப் போட்டிக்கு முன்பு வரை டிக்கெட்டுகள் விற்பனையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய போட்டித் தொடரில் டிக்கெட் விலைகள் ₹100 இலிருந்து தொடங்கியதால், அதிக ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண ஆர்வமாக உள்ளனர். இந்தியா, நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 339 ரன்கள் என்ற சாதனை இலக்கை விரட்டி வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பிறகு, டிக்கெட்டுக்கான தேவை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு கொடுக்கத் தயாராக உள்ள ரசிகர்கள், எப்போது டிக்கெட்டுகளைப் பெற முடியும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இதுபோன்ற குழப்பம் 2023 ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையிலும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.