Page Loader
INDvsAUS Final : இந்தியாவின் கனவு நிராசையானது; ஆறாவது முறையாக பட்டம் வென்றது ஆஸ்திரேலியா
ஆறாவது முறையாக பட்டம் வென்றது ஆஸ்திரேலியா

INDvsAUS Final : இந்தியாவின் கனவு நிராசையானது; ஆறாவது முறையாக பட்டம் வென்றது ஆஸ்திரேலியா

எழுதியவர் Sekar Chinnappan
Nov 19, 2023
09:32 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த நிலையில், விராட் கோலி 54 ரன்களும், கேஎல் ராகுல் 66 ரன்களும் எடுத்தனர். எனினும், இதர வீரர்கள் அனைவரும் சொதப்பியதால், இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.

INDvsAUS Final Australia beats India

டிராவிஸ் ஹெட் சதம்

241 ரன்கள் எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில் 7 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இது இந்திய அணிக்கு நம்பிக்கை கொடுத்தாலும், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். டிராவிஸ் ஹெட் 2 ரன்கள் தேவையிருக்கும்போது 137 ரன்கள் எடுத்து அவுட்டானார். மார்னஸ் லாபுசாக்னே கடைசி வரை அவுட்டாமா 58 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், 43 ஓவர்களில் இலக்கை எட்டி ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக பட்டத்தைக் கைப்பற்றியது. மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் இருந்த இந்திய அணி ஏமாற்றத்துடன் ஒருநாள் உலகக்கோப்பை தொடரை முடித்துள்ளது.