யு19 உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள முத்தரப்பு தொடர் மற்றும் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்தியாவின் யு19 அணியை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) அறிவித்துள்ளது. தற்போது துபாயில் நடந்து வரும் யு19 ஆசிய கோப்பை 2023இல் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள உதய் பிரதாப் சஹாரான், உலகக் கோப்பை அணியையும் வழிநடத்த உள்ளார். ஜூனியர் கிரிக்கெட் தேர்வுக் குழு முத்தரப்புத் தொடர் மற்றும் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளதோடு, தென்னாப்பிரிக்க முத்தரப்பு தொடருக்கான அணியுடன் பயணிக்கும் காத்திருப்பு வீரர்களையும் அறிவித்துள்ளது. மேலும், கூடுதலாக நான்கு காத்திருப்பு வீரர்களையும் தனியாக அறிவித்துள்ளது.
முத்தரப்பு மற்றும் உலகக்கோப்பை தொடர்களுக்கான இந்திய அணி
இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்புத் தொடர் டிசம்பர் 29இல் தொடங்கும். முத்தரப்பு தொடருக்குப் பிறகு, ஜனவரி 20இல் யு19 உலகக்கோப்பை தொடங்க உள்ளது. யு19 உலகக்கோப்பை மற்றும் முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி: அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரான், ஆரவெல்லி அவனிஷ் ராவ், சௌமி குமார் பாண்டே, முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி. பயணிக்கும் காத்திருப்பு வீரர்கள் : பிரேம் தேவ்கர், அன்ஷ் கோசாய், எம்.டி. அமான். காத்திருப்பு வீரர்கள் : திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், பி விக்னேஷ், கிரண் சோர்மலே.