Loading...
ஐசிசி 2027 ஒருநாள் உலகக்கோப்பை அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு; முழு விவரம்
ஐசிசி 2027 ஒருநாள் உலகக்கோப்பை அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு

ஐசிசி 2027 ஒருநாள் உலகக்கோப்பை அதிகாரப்பூர்வ அட்டவணை வெளியீடு; முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 02, 2026
06:45 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமிபியா ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் கூட்டாக நடத்தப்படும் இத்தொடரில் மொத்தம் 14 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன. 57 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் திருவிழா 2027 அக்டோபர் 2 அன்று தொடங்கி நவம்பர் 21 அன்று இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது.

இந்திய அணி

குரூப் ஏ பிரிவில் இந்திய அணி மற்றும் முக்கிய ஆட்டங்கள்

இத்தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் ஏ பிரிவில் ஒன்றாக இடம்பெற்றுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 7 அன்று கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

அதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா vs பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் அக்டோபர் 10 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது.

பின்னர் அக்டோபர் 14-இல் ஆப்கானிஸ்தானையும், அக்டோபர் 17-இல் தகுதிச்சுற்று அணி ஏ-வையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

சூப்பர் 7

குரூப் பி பிரிவும் சூப்பர் 7 சுற்றும்

குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் தகுதிச்சுற்று அணி பி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இரு குழுக்களிலும் உள்ள முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் சிறந்த 4-வது இடத்தைப் பிடிக்கும் அணி என மொத்தம் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றுகளுக்குத் தகுதி பெறும்.

இச்சுற்றின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

ADVERTISEMENT

இறுதிப்போட்டி

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி விவரங்கள்

உலகக்கோப்பையின் முதலாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 17 அன்று கேப் டவுனிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 18 அன்று டிஷ்வானே நகரிலும் நடைபெறவுள்ளது.

தொடரின் மகுடத்தை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நவம்பர் 21 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கு நவம்பர் 22 ரிசர்வ் நாளாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT