Nvidia CEO பதவிக்கு திரும்புகிறாரா ஜென்சன் ஹுவாங்? சிலிக்கான் வேலி தலைவர்கள் தீவிர ஆதரவு
செய்தி முன்னோட்டம்
என்விடியாவின் முன்னாள் CEO ஜென்சன் ஹுவாங், தனது ராஜினாமாவை தொடர்ந்து நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடியைத் தணிக்கும் வகையில் மீண்டும் CEO பதவிக்குத் திரும்புவது குறித்துப் பரிசீலித்து வருவதாக பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சிலிக்கான் வேலியின் செல்வாக்கு மிக்க தொழில்நுட்பத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு என்விடியா நிர்வாகக் குழுவிற்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆதரவு
எலான் மஸ்க் தலைமையில் 'வார் ரூம்'
ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்த கோரி தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன் பிரச்சாரத்திற்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் CEO எலான் மஸ்க், எபிக் கேம்ஸ் சி.இ.ஓ டிம் ஸ்வீனி மற்றும் ஒய் காம்பினேட்டர் CEO கேரி டான் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பகிரங்க ஆதரவு அளித்துள்ளனர்
"ஜென்சனை மீண்டும் பணியில் அமர்த்த கோரும் மனுவில் நானும் கையெழுத்திடுகிறேன்" என எலான் மஸ்க் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இணையவழி மனுவிற்கு இதுவரை 1,60,000-க்கும் மேற்பட்டோர் ஆதரவளித்துள்ளனர்.
என்விடியா நிர்வாகக் குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், வெள்ளை மாளிகையின் ஆதரவை பெறவும் சிலிக்கான் வேலி நிர்வாகிகள் இணைந்து ஒரு தனி வார் ரூம் அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு ஜென்சன் ஹுவாங்கின் மறைமுக ஆதரவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
ராஜினாமா சர்ச்சை
ராஜினாமா சர்ச்சையின் பின்னணி
கடந்த வாரம் ஜென்சன் ஹுவாங் திடீரெனப் பதவி விலகியதற்கு பின்னால் தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பு ரீதியான சர்ச்சைகள் உள்ளன.
சிங்கப்பூரை சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனத்தின் நிர்வாகியும், சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுபவருமான ஆலிஸ் ஹுவாங் உடனான உறவு மற்றும் என்விடியாவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி பவல் உள்ளிட்ட இரு ஊழியர்களுடனான உறவு குறித்த புகார்கள் வெளியானதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
ஜென்சன் ஹுவாங் மீண்டும் வருவதற்கு வாஷிங்டனில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
என்விடியாவின் தலைமையில் ஒரு "மிகப்பெரிய மாற்றம்" தேவை என அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இடைக்கால சி.இ.ஓ-வாக கோலெட் கிரெஸ் நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.