LOADING...
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்குத் தடை; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2025
05:21 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் இடையே ரத்து செய்யப்பட்ட போட்டியைக் கையாள்வதில் போட்டி ஏற்பாட்டாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டி, எதிர்கால உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தலைமையில் நடைபெற்ற வாரியத்தின் 79வது கூட்டத்தின் போது இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வலுவான வார்த்தைகளைக் கொண்ட ஒரு அறிக்கையில், இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான குழு-நிலை மோதலை ரத்து செய்ததற்கான WCL இன் விளக்கத்தை விமர்சித்தது.

அடிப்படை

எந்த அடிப்படையும் இல்லை என விமர்சனம்

எந்த கிரிக்கெட் அடிப்படையும் இல்லாமல் இந்த போட்டியை ரத்து செய்ததாக, போட்டி அமைப்பாளர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக விமர்சனம் செய்தது. "WCL உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோருவது, கேலிக்கூத்தாக இருந்தாலும், ரத்து கிரிக்கெட் தகுதியை அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட தேசியவாதக் கதைக்கு அடிபணிந்தது என்பதை கவனக்குறைவாக ஒப்புக்கொள்கிறது." என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியது. அத்தகைய நடத்தை சர்வதேச விளையாட்டு சமூகத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத செய்தியை அனுப்புகிறது என்று அது மேலும் கூறியது. முன்னதாக, ஜூலை 20 ஆம் தேதி நடந்த குழு போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் அணி சமூக ஊடகங்களில் அதிகரித்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் போட்டியில் இருந்து விலகியதால் இந்த சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.