Loading...
பைனான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் கிரிப்டோ ஹேக்கிங் செய்தது வட கொரிய ஹேக்கர்கள்? முழு பின்னணி
பைனான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் கிரிப்டோ ஹேக்கிங் செய்தது வட கொரிய ஹேக்கர்கள் என தகவல்

பைனான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் கிரிப்டோ ஹேக்கிங் செய்தது வட கொரிய ஹேக்கர்கள்? முழு பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2026
07:53 pm

செய்தி முன்னோட்டம்

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான பைனான்ஸ், கிரிப்டோ வரலாற்றிலேயே மிகப்பெரிய இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஹேக்கர்கள் சுமார் $6.3 பில்லியன் (சுமார் ₹53,000 கோடி) மதிப்புள்ள கிரிப்டோ சொத்துக்களைத் திருடியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது 10 வெவ்வேறு பிளாக்செயின் நெட்வொர்க்குகளில் இருந்த பைனான்ஸ் வாலட்களிலிருந்து கிரிப்டோ நாணயங்கள் ஹேக்கர்களின் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளன.

20 நிமிடங்கள்

வெறும் 20 நிமிடங்களில் கிரிப்டோ சொத்துக்களை சுருட்டிய ஹேக்கர்கள்

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி பிளாக்செயின் ஆய்வு நிறுவனமான டிஆர்எம் லேப்ஸ், இந்த மிகப்பெரிய கொள்ளையில் பெரும் பகுதி பரிவர்த்தனைகள் வெறும் 20 நிமிடங்களுக்குள் மின்னல் வேகத்தில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் வட கொரியாவை சேர்ந்த டிரேடர்ட்ரைட்டர் (TraderTraitor) என்ற புகழ்பெற்ற ஹேக்கர் குழு இருப்பது உறுதியாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிளாக்செயின் தரவுகள் மற்றும் சைபர் புலனாய்வு ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள்

பொறியாளரின் லேப்டாப் மூலம் சர்வருக்குள் நுழைந்த ஹேக்கர்கள்

பைனான்ஸ் நிறுவனம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நிறுவனத்தின் DevOps பொறியாளர் ஒருவரின் மடிக்கணினி ஹேக்கர்களால் முடக்கப்பட்டதே இத்தாக்குதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

அந்த சாதனத்தின் மூலம் நிறுவனத்தின் சேவை மையத்திற்குள் ஊடுருவிய ஹேக்கர்கள், அனுமதியற்ற பணப்பரிவர்த்தனைகளை செய்துள்ளனர்.

எனினும், வாடிக்கையாளர்களின் பிரைவேட் கீ எதுவுமே கசியவில்லை என்றும், அமைப்புகளில் ஏற்பட்ட இந்தத் துளை உடனடியாக அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவசர நடவடிக்கை

பயனர்களின் நிதி பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் அவசர நடவடிக்கைகள்

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனைகளைத் தற்காலிகமாக பைனான்ஸ் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சொத்துக்களில் சுமார் $3 பில்லியன் நிதியை முடக்கியுள்ளது.

பைனான்ஸ் இணை நிறுவனர் சாங்பெங் ஜாவோ, "வாடிக்கையாளர்களின் நிதி பாதுகாப்பாக உள்ளது" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த ஹேக்கிங் சம்பவத்தால் பயனர்களுக்கு ஏற்படும் அனைத்து நிதி இழப்புகளையும் நிறுவனமே முழுமையாக ஈடுசெய்யும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT