வட கொரியா: செய்தி

11 Apr 2024

போர்

போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் இது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக முன்பை விட இப்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார்.

20 Feb 2024

ரஷ்யா

வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட காரை பரிசளித்தார் ரஷ்ய அதிபர் புதின் 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், "தனிப்பட்ட பயன்பாட்டிற்காக" ஒரு காரைப் பரிசளித்தார் என்று வட கொரிய அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.

01 Jan 2024

ஜப்பான்

ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை 

மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.

28 Nov 2023

ஐநா சபை

பென்டகன், வெள்ளை மாளிகையை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்ததாக கூறும் வட கொரியா 

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், வெள்ளை மாளிகை, மற்றும் அருகிலுள்ள அமெரிக்க கடற்படை நிலையங்களை, புதிதாக ஏவிய உளவு செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது.

சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா

தென் கொரியா மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத வட கொரியா, செயற்கைக்கோள் ஏவப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

14 Oct 2023

ரஷ்யா

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: சாட்டிலைட் ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா

ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அந்த கூற்றுக்களை நிரூபிக்கும் வகையில் செயற்கைக்கோள் படங்களை வெள்ளை மாளிகை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

ரஷ்யாவிற்கு ரயிலில் பயணம் செய்யும் வடகொரியா அதிபர்; காரணம் தெரியுமா?

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்கவுள்ளார்.

05 Sep 2023

ரஷ்யா

போருக்கான ஆயுத உதவி: ரஷ்ய அதிபரை சந்திக்க இருக்கிறார் வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்

உக்ரைனில் நடந்து வரும் போருக்கு ஆயுதம் வழங்கி ரஷ்யாவுக்கு உதவுவது குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள் 

வட கொரியா நேற்று ஒரு உருவகப்படுத்தப்பட்ட "தந்திரோபாய அணுசக்தி தாக்குதல்" பயிற்சியை நடத்தியதாக அறிவித்துள்ளது.

10 Aug 2023

உலகம்

வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வட கொரிய உளவு செயற்கைக்கோளின் புகைப்படங்களை வெளியிட்ட தென் கொரியா

தென் கொரியாவின் இராணுவம் வட கொரிய உளவு செயற்கைக்கோள் சிதைவுகளின் புகைப்படங்களை இன்று(மே 31) வெளியிட்டுள்ளது.

வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அதோடு அவர்கள் ஆட்சி தகர்க்கப்படும்: ஜோ பைடன் 

வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும், அத்தோடு வட கொரிய தலைவரின் ஆட்சி தகர்க்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

17 Apr 2023

உலகம்

வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள்

ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், வட கொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுப்பதற்கும், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு பயிற்சிகளை திங்களன்று(ஏப் 17) நடத்தியது.

மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா

வட கொரியா திங்கள்கிழமை அன்று ஒரு அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

25 Mar 2023

உலகம்

ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள்

வட கொரியாவில் பஞ்சம் நிலவி வரும் நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் ரூ.2 லட்சம்(£1,950) மதிப்பிலான கிறிஸ்டியன் டியோர் வெல்வெட் ஹூடியை அணிந்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

24 Mar 2023

உலகம்

சுனாமியை உருவாக்கக்கூடிய ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்: வடகொரியா சோதனை

"கதிரியக்க சுனாமியை" உருவாக்கக்கூடிய அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பலை வட கொரியா சோதித்துள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு: அமெரிக்கா பாராட்டு

ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் பிரதமர்கள் வியாழன் அன்று நடந்த கூட்டத்தில் சந்தித்து கொண்டனர். மேலும், பல ஆண்டுகாலமாக தொடரும் இந்த பகைமையை இனி தொடர போவதில்லை என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.

07 Mar 2023

உலகம்

பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா

தங்களது ஒரு சோதனை ஏவுகணை சுட்டு வீழ்த்தபட்டாலும் அது போர் பிரகடனமாக கருதப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் தென் கொரியா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சிகள் தான் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு காரணம் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா

வட கொரியா இன்று(பிப் 20) இன்னொரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய இராணுவம் கூறியுள்ளது.

18 Feb 2023

உலகம்

ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது

வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் தரையிறங்கி இருக்கலாம் என்று இன்று(பிப் 18) ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

09 Feb 2023

உலகம்

ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர்

வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரவு நேர அணிவகுப்பில் தன் மகளுடன் கலந்து கொண்டார். அந்த அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.