
டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கப்பட்ட ரஷ்யா, கனடா, வட கொரியா; என்ன காரணம்?
செய்தி முன்னோட்டம்
இந்திய நேரப்படி நள்ளிரவு 1:30 மணியளவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் பலவற்றின் மீதும் பரஸ்பர வரிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
ஒவ்வொரு நாட்டின் மீதும் அவர் விதித்துள்ள பகுதியளவு பரஸ்பர வரிகளை பற்றி விவரிக்கையில் ஒரு சில நாடுகள் அதில் விடுபட்டிருந்ததை கவனிக்க முடிந்தது.
கனடா, மெக்சிகோ ஆகியவற்றை தாண்டி, டிரம்பின் பரஸ்பர கட்டணப் பட்டியலில் இடம்பெறாத நாடுகளில் ரஷ்யாவும், வட கொரியாவும் அடங்கும்.
டிரம்பின் வரிகளிலிருந்து கனடா, ரஷ்யா, மெக்சிகோ எவ்வாறு தப்பித்தன?
விரிவாக பார்ப்போம்!
விலக்கு
ஒரு சில நாடுகளுக்கு பரஸ்பர வரியிலிருந்து விலக்கு? அதன் அர்த்தம் என்ன?
அதே சமயம் கனடாவும், மெக்சிகோவும் டொனால்ட் டிரம்பின் ஏப்ரல் 2ஆம் தேதி பரஸ்பர வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவை எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்று அர்த்தமல்ல.
கனேடிய மற்றும் மெக்சிகன் பொருட்களுக்கான தற்போதைய வரிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன, மேலும் வாகன தயாரிப்புகள் மீதான புதிய வரிகள் வியாழக்கிழமை அமலுக்கு வரும்.
இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்பு 25 சதவீத ஃபெண்டானில் தொடர்பான வரிகளையும், கனேடிய எரிசக்தி மற்றும் பொட்டாஷுக்கு 10 சதவீதத்தையும் டிரம்ப் விதித்திருந்தார்.
மறுபுறம், கியூபா, பெலாரஸ், வட கொரியா மற்றும் ரஷ்யா ஆகியவை டிரம்பின் பரஸ்பர வரிகளுக்கு உட்படுத்தப்படாததன் காரணம், அவை ஏற்கனவே வர்த்தக தடைகளை எதிர்கொள்கின்றன என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
பரஸ்பர வரிகள்
நாடு வாரியாக டிரம்பின் பரஸ்பர வரிகள்
அமெரிக்கா பல நாடுகள் மீது 10 சதவீத அடிப்படை வரியிலிருந்து தொடங்கி, மாறுபட்ட பரஸ்பர வரி விகிதங்களை விதித்துள்ளது.
இந்தியா மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்துள்ள அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியம் மீது 20 சதவீத வரியும், வியட்நாம் மீது 46 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம், தைவான் 32 சதவீதம் மற்றும் தாய்லாந்து மீது 36 சதவீத வரியும் விதித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக உபரியாக $295 பில்லியனைக் கொண்ட சீனா, 34 சதவீத வரியை எதிர்கொள்ள நேரிடும்.