Page Loader
'இந்தியாவிற்கு 26% வரி': 'பரஸ்பர வரிகள்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

'இந்தியாவிற்கு 26% வரி': 'பரஸ்பர வரிகள்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2025
01:50 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று "விடுதலை நாள்" (Liberation Day)என்று அறிவித்துள்ளார். இது சார்ந்த அறிவிப்புகள் தற்போது வெள்ளை மாளிகையில் அவர் வெளியிட்டார். அதன்படி பரஸ்பரவிதிகள் பாதியளவு குறைக்கப்பட்டதாக தெரிவித்தார். நாடுவரியாக எவ்வளவு வரிகள் என்பதையும் அவர் கூறினார். டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அதே போல, ஆட்டோமொபைல் மீதான 25% வரிகள் ஏப்ரல் 3 முதல் அமலுக்கு வரும் என கூறினார். டிரம்பின் அறிவிப்பு வெளியாகும் முன்னர் பங்குச் சந்தையிலும், வணிக உலகிலும் பெரும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியது. புதன்கிழமை யூரோ மற்றும் ஸ்டெர்லிங் போன்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் சரிந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரிகள்

முழுமையான பரஸ்பர வரி இல்லை: பாதியளவே வரி 

சீனா: 67%, EU: 32% ஜப்பான்: 24% உட்பட நாடு வாரியாக வரிகளை அவர் வெளியிட்டார். வரிகளில் இருந்து விலக்கு வேண்டுமென்றால், அமெரிக்காவில் உற்பத்தி செய்யுமாறும் உலக நாடுகளுக்கு அவர் கூறினார். அதே நேரம், நாட்டு மக்களையும் அமெரிக்க பொருட்களுக்கு முக்கியத்துவம் தருமாறும் அறிவுறுத்தினார். அதே நேரத்தில், அமெரிக்காவில், ஆப்பிள், ஆரக்கிள் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் அமெரிக்காவில் முதலீடு செய்யவுள்ளதாக அவர் கூறினார். சிப் உற்பத்தியாளர்கள், மருந்து தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துமே அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டால் வரி விலக்கு உண்டு எனவும் அவர் கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

நாடு வாரியாக வரிகள்