வட கொரிய உளவு செயற்கைக்கோளின் புகைப்படங்களை வெளியிட்ட தென் கொரியா
செய்தி முன்னோட்டம்
தென் கொரியாவின் இராணுவம் வட கொரிய உளவு செயற்கைக்கோள் சிதைவுகளின் புகைப்படங்களை இன்று(மே 31) வெளியிட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள், ராக்கெட் தோல்வியால் புதன்கிழமை ஏவப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானது.
சியோலின் இராணுவம் அந்த செயற்கைக்கோளின் சிதைவுகளைக் கண்டுபிடித்து மீட்டது.
தென் கொரியா வெளியிட்ட படங்கள், ஒரு பெரிய பீப்பாய் போன்ற உலோக அமைப்பைக் காட்டுகிறது. அதற்கு கீழே சில மெல்லிய குழாய்கள் மற்றும் கம்பிகள் உள்ளன.
இந்த செயற்கைக்கோள் சிதைவுகள், ஈச்சியோங் தீவுக்கு மேற்கே 200 கிலோமீட்டர்(124 மைல்) தொலைவில் தண்ணீருக்குள் இருந்து மீட்கப்பட்டதாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.
details
வட கொரியாவிற்கு சொந்தமான செயற்கைகோள் எதுவும் விண்வெளியில் செயல்படவில்லை
இந்த செயற்கோளை வட கொரியா ஏவியதும் ஒரு விபத்து ஏற்பட்டதால், அது கடலில் விழுந்து நொறுங்கியது.
வட கொரியாவிற்கு சொந்தமான செயற்கைகோள் எதுவும் விண்வெளியில் செயல்படவில்லை.
அதனால், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், இராணுவ உளவு செயற்கைக்கோள் உருவாக்குவதை தனது ஆட்சியின் முதன்மையான கடமையாக மாற்றியுள்ளார்.
மே 31ஆம் தேதி வட கொரிய விண்வெளி அதிகாரிகள், வட பியோங்கன் மாகாணத்தின் சோல்சான் கவுண்டியில் உள்ள சோஹே செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, புதிய ரக கேரியர் ராக்கெட்டில் பொருத்தப்பட்ட 'மல்லிஜியாங்-1' என்ற ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவினர்.