Page Loader
வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு
அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்துள்ளார்

வடகொரியா: உயர்மட்ட ஜெனரல் பதவி நீக்கம், போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 10, 2023
09:49 am

செய்தி முன்னோட்டம்

வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, போர் தயாரிப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுபற்றி அந்நாட்டின் ஊடகமான KCNA, வியாழனன்று விரிவான செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வட கொரியாவின் எதிரிகளைத் தடுப்பதற்கான எதிர் நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில் கிம் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார் என அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், வடகொரியாவின் எதிரிகள் யாரென்று பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலுக்குப் பதிலாக ஜெனரல் ரி யோங் கில் நியமிக்கப்பட்டார் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

card 2

ஆயுத உற்பத்தியை விரிவுபடுத்த உத்தரவு:

கிம், ஆயுத உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்கான இலக்கையும் நிர்ணயித்துள்ளார் என KCNA தெரிவித்துள்ளது. கடந்த வாரம், கிம் ஆயுத தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார் என்றும், அங்கு அவர், கூடுதலாக ஏவுகணை இயந்திரங்கள், பீரங்கி மற்றும் பிற ஆயுதங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டதாகவும் தெரிகிறது. ஏற்கனவே, பீரங்கி குண்டுகள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனில் நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு, வடகொரியா வழங்குவதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், ரஷ்யாவும் வடகொரியாவும் இந்தக் கூற்றுக்களை மறுத்துள்ளன. வடகொரியா அதிபர், நாட்டின் சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன், போர் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ராணுவம் தனது படைகளை, போருக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.