உலக செய்திகள்
உலகத் தலைவர்களுக்கு நடுவே யார் இந்த இந்தியர்? மோடி - ஜின்பிங் அருகே நின்று வைரலான 36 வயது அதிகாரி
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய மூவரும் கைகளைக் கோர்த்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்த புகைப்படம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.
லண்டன் நகரில் பிரமாண்ட கங்கை ஆரத்தி! தேம்ஸ் நதிக்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்; முழு விபரம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான கங்கை ஆரத்தி விழா முதன்முறையாக மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
செங்கடல் துறைமுகங்களைக் கைப்பற்றிய ஹூதிகள்! சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்; தீவிரமடையும் போர் மேகங்கள்
ஏமனில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்நாட்டின் முக்கிய செங்கடல் கடலோரப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததைத் தொடர்ந்து, அண்டை நாடான சவுதி அரேபியா மீது மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பிரிட்டன் நான்கு துண்டுகளாக உடைகிறதா? சுதந்திரம் கோரி 3 நாட்டு தலைவர்கள் அவசர கூட்டம்
கார்டிஃப்பில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாட்டில் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளின் முதன்மை அமைச்சர்கள் பங்கேற்று சுயநிர்ணய உரிமைக்கான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட உள்ளனர்.
9/11 தாக்குதலுக்கு முன்பே இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஒசாமா பின்லேடன்: சிஐஏ தகவல்
அமெரிக்காவின் 9/11 பயங்கரவாதத் தாக்குதலின் 25வது ஆண்டை முன்னிட்டு, அந்நாட்டின் மத்திய உளவு அமைப்பான சிஐஏ ரகசிய உளவுத்துறை ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
240 பயணிகளுடன் கடலில் மாயமான கப்பல்! இந்தோனேசியாவில் தீவிர தேடுதல் வேட்டை
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுராபயா நகரிலிருந்து போர்னியோ தீவில் உள்ள பஞ்சர்மசின் நோக்கிச் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று 240 பயணிகளுடன் ஜாவா கடலில் திடீரென மாயமாகியுள்ளது.
இந்திய சோலார் தயாரிப்புகளுக்கு 249% மேல் வரி! அமெரிக்க வர்த்தக அமைச்சகம் இறுதி முடிவு
இந்தியா, இந்தோனேசியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் செல்கள் மற்றும் பேனல்களுக்குக் கடுமையான வரிகளை அமெரிக்க அரசு இறுதி செய்துள்ளது.
பிரதமரின் அழகுக்காக 7 ஆண்டுகளில் ரூ.4.5 கோடி செலவு; இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பரபரப்புத் தகவல்
இஸ்ரேல் நாட்டில் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2026 ஆகஸ்ட் மாதம் வரையிலான 7 ஆண்டுக் காலத்தில், நாட்டின் பிரதமர்களின் முடி அலங்காரம் மற்றும் ஒப்பனைக்காக அரசு சார்பில் ரூ. 4.49 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
பயங்கர வெடிப்பு, 30 பேரின் கருகிய உடல்கள் மீட்பு! பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர தீ விபத்துக்கு உள்ளான எம்பி ஜூன் ஆஸ்டர் என்ற பயணிகள் படகில் இருந்து மீட்கப்பட்ட 30 பேரின் கருகிய உடல்கள் சனிக்கிழமை (செப்டம்பர் 12) அடையாளம் காண்பதற்காக கொரோன் துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
வரலாற்றில் முதன்முறையாக $6 தாண்டியது! அமெரிக்காவில் டீசல் விலை 61% உயர்வு
அமெரிக்காவில் டீசல் எரிபொருளின் சராசரி சில்லறை விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு கேலனுக்கு 6 டாலர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
பாபா வங்கா கணிப்பு 2027: சூப்பர் ஹியூமன்களை உருவாக்கப் போகும் விசித்திர நோய்?
பல்கேரியாவின் புகழ்பெற்ற ஞானி, குறிசொல்லி பாபா வங்கா, 2027-ஆம் ஆண்டிற்காக கணித்துள்ள புதிய தீர்க்கதரிசன விவரங்கள் வெளியாகியுள்ளன.
வெறுப்புப் பேச்சை ஏற்க முடியாது! இந்தியர்களுக்கு எதிரான ஆன்லைன் இனவெறி கருத்துகள்; சிங்கப்பூர் பிரதமர் கடும் கண்டனம்
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினரை இலக்கு வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட இனவெறி மற்றும் அந்நிய வெறுப்பு சார்ந்த கருத்துகள் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பக்கத்து வீட்டு ரகசியங்களை புரணி பேசியே 2 வீடுகள் வாங்கிய 67 வயது பெண்; கொலம்பியாவில் நடந்த விசித்திர சம்பவம்
கொலம்பியா நாட்டை சேர்ந்த 67 வயது பெண் ஒருவர், தனது பகுதியில் உள்ள பக்கத்து வீடுகளின் ரகசியங்கள் மற்றும் வதந்திகளை சேகரித்து பணத்திற்கு விற்பனை செய்து வருகிறார்.
மெர்கேட்டர் வரைபடம் காட்டும் பொய்! உலக வரைபடத்தில் இந்தியா சிறியதாகத் தெரிவது ஏன்? முழு பின்னணி
நாம் சிறுவயது முதல் பள்ளிகளிலும் புத்தகங்களிலும் பார்த்து பழகிய உலக வரைபடம், நாடுகளின் உண்மையான அளவை அப்படியே காட்டுவதில்லை.
4 டாலரைக் கடந்து வரலாறு காணாத உயர்வு! அமெரிக்காவில் விண்ணை முட்டும் பெட்ரோல் விலை; காரணம் என்ன?
அமெரிக்க மக்கள் இந்த லேபர் டே வார இறுதியில் வரலாறு காணாத மிக அதிக பெட்ரோல் விலையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மிஸ் வேர்ல்ட் 2026: உலக அழகி பட்டம் வென்றார் ஜோஹேரி மோலா: யார் இவர்?
வியட்நாமின் நட்ராங் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 73வது மிஸ் வேர்ல்ட் 2026 அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹேரி மோலா டோமிங்குஸ் வெற்றி பெற்று புதிய உலக அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.
மீண்டும் வெடித்தது கடல் போர்! அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரானிய ஏவுகணை வீச்சு; அமெரிக்கா பதிலடி எச்சரிக்கை
அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் தாக்குதல் போர்க்கப்பல் ஆகியவற்றைக் குறிவைத்து ஈரானியப் புரட்சிகர காவல் படையின் (ஐஆர்ஜிசி) விண்வெளிப் பிரிவு பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலை 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு; காரணம் என்ன?
உக்ரைன் தலைநகர் கீவ் மீதான வான்வழித் தாக்குதல்களை மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக உலகில் குழந்தைகளை விட முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
மனித வரலாற்றிலேயே முதன்முறையாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விட 65 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐநா புதிய உலக வரைபடம் ஒப்புதல்: ஆப்பிரிக்கா பெரிதாகவும், அமெரிக்கா சிறியதாகவும் மாற்றம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மெர்கேட்டர் உலக வரைபடத்திற்குப் பதிலாகப் புதிய ஈக்வல் எர்த் வரைபடத்தைப் பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைதிப் பேச்சுகளுக்கு அமெரிக்கத் தூதர்கள் வருகை; தற்காலிகமாக வான்வழித் தாக்குதல் நிறுத்தப்படுவதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 4.5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர்கள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது! பிக்ஏக்ஸ் மலையைத் தாக்க அமெரிக்கா திட்டம்; டிரம்ப் புதிய எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் பிக்ஏக்ஸ் நிலத்தடி அணு ஆயுத மையத்தை அமெரிக்க ராணுவம் மிக விரைவில் தாக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உடம்பை லேசாக சொறிந்து விட்டால் போதும்! மாதம் ₹14 லட்சம் சம்பாதிக்கும் வித்தியாசமான தொழில்; வியப்பில் இணையவாசிகள்
சீனாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஷென்சென் நகரை சேர்ந்த 32 வயதான ஜாங் ஷியாவோகியோ என்பவர், சுமா என்ற பெயரில் இரண்டு மசாஜ் மையங்களைத் திறந்துள்ளார்.
500 ஆண்டுகால வரைபட வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி! ஆப்பிரிக்காவின் உண்மையான அளவை வெளியிட ஐநாவில் வாக்கெடுப்பு
பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் உலக வரைபடத்திற்குப் பதிலாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் உண்மையான பரப்பளவைத் துல்லியமாகக் காட்டும் புதிய உலக வரைபடத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்பது குறித்து ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) முக்கிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
டாடா கெமிக்கல்ஸ் ஆலையை மூட கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
கென்யாவின் காஜியாடோ பகுதியில் உள்ள மகடி ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனமான டாடா கெமிக்கல்ஸ் தனது ஆலை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அதிரடி சந்திப்பு! எஸ்சிஓ மாநாட்டில் ஈரான் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பேஷெஷ்கியான் இடையே திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முக்கிய சந்திப்பு நடைபெற்றது.
ஏஐ பயன்படுத்தி நேபாள பேரழிவு நிவாரணம் என்ற பெயரில் மோசடி; பணம் சுருட்டியவர் கைது
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான போதேகோஷி வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, நிவாரண நிதி திரட்டும் போர்வையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட 32 வயது நபரை நேபாள காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது.
கனடாவில் படிக்க திட்டமிடும் மாணவர்களுக்கு அதிர்ச்சி! செப்டம்பர் 1 முதல் மாறும் விதிகள்; வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கனடாவில் உயர்கல்வி பயிலத் திட்டமிடும் சர்வதேச மாணவர்களுக்கான கல்வி விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம் குடும்பத்தின் உள்நாட்டு விவகாரம், அஞ்சத் தேவையில்லை! மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணைவது குறித்து வங்கதேசம் கருத்து
சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று முக்கிய நாடுகள் இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர்வதில் வங்கதேசத்திற்கு எவ்விதப் பாதுகாப்பு அல்லது தூதரக ரீதியிலான ஆபத்தும் இல்லை என்று வங்கதேச அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தலைவர் முஜ்தபா காமேனி பரபரப்பு கடிதம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், ஈரானின் உச்ச மதத் தலைவர் முஜ்தபா காமேனி பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு முக்கிய எழுத்துப்பூர்வ செய்தியை அனுப்பியுள்ளார்.
தாஷ்கண்டில் யோகா செய்த பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான் பயணத்தில் மிளிர்ந்த கலாச்சார பிணைப்பு
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு யோகா அமர்வில் கலந்துகொண்டார்.
4 மணி நேரப் போராட்டம், மீண்டெழுந்த 97 வயது மூதாட்டி! நேபாளத்தை உலுக்கிய வெள்ளத்தில் போராடி மீண்ட கதை
நேபாள நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 97 வயது மூதாட்டி குண மாயா போஹாரா என்பவர் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வாழும் நாட்டிற்கு உண்மையா இருங்க! நியூயார்க் மேடிசன் சதுக்கத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரை
நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற மேடிசன் சதுக்க மண்டபத்தில் நடைபெற்ற 'அனைவருக்குமான ஒற்றுமை கொண்டாட்டம்' நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்பு! பிரதமர் மோடியை வரவேற்ற உஸ்பெகிஸ்தான் அதிபர்
இருதரப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் சென்றடைந்தார்.
இந்தியாவுக்கு எதிராக கல்வான் மோதலை நடத்திய தளபதி திடீரென பதவி நீக்கம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் நடவடிக்கை
கடந்த 2017ல் டோக்லாம் மற்றும் 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படைகளுக்கு எதிராக சீன ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்திய வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் அமைப்பின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜாவோ ஜோங்கி, சீன அரசின் உயரிய அரசியல் ஆலோசனைக் குழுவான CPPCC அமைப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
எந்த நேரத்திலும் ஏரி உடையலாம்! நேபாளத்தை அச்சுறுத்தும் புதிய பேரழிவு; சீனா அவசர எச்சரிக்கை
சீனா மற்றும் நேபாள எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, லெண்டே ஆற்றுப் படுகையின் மேல் பகுதியில் புதிதாக உருவான இயற்கை ஏரி எந்த நேரத்திலும் கரையுடைந்து பேரழிவை ஏற்படுத்தலாம் என சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.
இனி வெனிசுலாவின் 65 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்; டிரம்ப் அதிரடி
அமெரிக்கா மற்றும் வெனிசுலா நாடுகளுக்கு இடையே உலக வரலாற்றிலேயே மிக மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிரூத் சோஷியல் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாக்கெடுப்பில் தில்லுமுல்லு! போராட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் புதிய பிரதமராக இப்திகார் கிலானி தேர்வு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர மக்கள் போராட்டங்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்தல் தில்லுமுல்லு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் தலைவர் பாரிஸ்டர் இப்திகார் அலி கிலானி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யா நேட்டோ நாடுகளைத் தாக்காது! சிஐஏ இயக்குநரின் திடீர் ரஷ்ய பயணத்திற்குப் பின் டிரம்ப் விளக்கம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் எல்லைகள் மீது எந்தவொரு ராணுவத் தாக்குதலையும் நடத்த மாட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
72 மணி நேரத்தில் வெடித்து சிதறும் ஆபத்து! 270 பேரைப் பலிகொண்ட நேபாள வெள்ளத்தில் புதிய பேரழிவு எச்சரிக்கை
கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவை சந்தித்துள்ள நேபாள எல்லைப் பகுதியில், அடுத்த 72 மணி நேரத்திற்குள் மற்றொரு பிரம்மாண்டக் கடல் போன்ற ஏரி உடையும் அபாயம் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் கோரத் தாக்குதல்! 9 நகரங்களில் வெடிச்சத்தம்; வான்வழி பாதுகாப்பிற்குத் தவிக்கும் உக்ரைன்
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் உட்பட 9 முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யப் படைகள் ஏவுகணைகள் மற்றும் அதிவேக ட்ரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதலை நடத்தியுள்ளன.
ராணுவ முகாம்களில் மினி அணு உலைகள் அமைக்கிறது அமெரிக்கா: $2.2 பில்லியன் திட்டம் அறிவிப்பு
பொது மின்சார விநியோக அமைப்பை சார்ந்திருக்காமல் சொந்தமாக மின்சாரம் தயாரிக்கும் நோக்கில், அமெரிக்காவில் உள்ள 5 முக்கிய ராணுவ முகாம்களில் மைக்ரோ ரியாக்டர்கள் எனப்படும் சிறிய அணு உலைகளை அமைக்க அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வருவாய் பகிர்வில் ஈரான் ஓமனுடன் ஒப்பந்தம்! அமெரிக்கா ஒப்புதல் அளிக்குமா?
சர்வதேசக் கடல்வழி எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் கட்டண வருவாயைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஈரானும் ஓமனும் ஓர் உடன்பாட்டிற்கு வந்துள்ளன.
ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை
ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்ததாகக் கூறி, இந்தியாவில் இயங்கி வரும் 4 தனியார் நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியக் குடிமக்கள் மீது அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஏசி கம்ப்ரஸர் வெடித்து பாகிஸ்தான் மருத்துவமனையில் தீ விபத்து; 15 குழந்தைகள் பரிதாப பலி
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையில் புதன்கிழமை (26ஆகஸ்ட்) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதிய கண்ணிவெடி வைத்தால் உடனடி அழிவு! ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீட்டதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கடல் கண்ணிவெடிகளும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் திடீரெனத் தரையிறங்கிய அமெரிக்கப் போர் விமானம்! மாஸ்கோவிற்கு சிஐஏ தலைவர் ஜான் ரட்க்ளிஃப் ரகசியப் பயணம்
அமெரிக்க மத்திய உளவு அமைப்பான சிஐஏவின் இயக்குனர் ஜான் ரட்க்ளிஃப், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) அன்று ரகசியமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி இனி அமெரிக்காவுக்கே சொந்தம்! புதிய மேப் வெளியிட்டு டொனால்ட் டிரம்ப் அதிரடி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச அளவில் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையை புதிய அமெரிக்கப் பகுதி என சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் மீண்டும் பகிர்ந்துள்ளார்.
ஈரான் போரில் 770க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயம் மற்றும் பலி; பென்டகன் அதிகாரப்பூர்வ தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 6வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், இந்த மோதலில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 770ஐ கடந்துள்ளதாகப் பென்டகன் தெரிவித்துள்ளது.
கனடா மீது 50% வரி! அமெரிக்கா-கனடா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்தது
அமெரிக்கா மற்றும் கனடா இடையே இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வந்த முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் எட்டப்படாமல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) அதிகாலை முற்றிலும் தோல்வியில் முடிவடைந்தது.
கலிஃபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்! நவம்பர் 8 ஆம் தேதியை தீபாவளி நாளாக அங்கீகரித்து சட்டப்பேரவை தீர்மானம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டின் நவம்பர் 8 ஆம் தேதியை அதிகாரப்பூர்வ தீபாவளி நாளாக அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்கத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல்! 255 வாக்குகள் பெற்று வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா பக்ருல் தேர்வு
வங்கதேசத்தில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க அதிபர் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் அந்நாட்டின் 23வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
100க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி! தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து ஏற்பட்ட கோர விபத்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
800க்கும் மேற்பட்ட ட்ரோன்கள்! ரஷ்யாவின் 17 பிராந்தியங்களில் உக்ரைன் மிகப்பெரிய தாக்குதல்
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் 2026 ஆம் ஆண்டின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
வறட்சியால் கருகிய பயிர்கள்! இங்கிலாந்து விவசாயிகளுக்கு 65 மில்லியன் பவுண்ட் உதவித் தொகை அறிவிப்பு
இங்கிலாந்து முழுவதும் நிலவி வரும் தொடர் வெப்ப அலை மற்றும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் 65 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான) அவசரகால நிதி உதவியை அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் போட்டியிடப் போகிறாரா டிரம்ப்? டிரம்ப் 2028 புகைப்படத்தால் அமெரிக்க அரசியலில் எழுந்த புதிய சர்ச்சை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில், டிரம்ப் 2028 எனக் குறிப்பிடப்பட்ட தொப்பியை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி ஈரானின் கட்டுப்பாடுதான்: டிரம்ப் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி; ஓமனுடன் சிறப்பு ஒப்பந்தம்
ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்காக ஓமன் நாட்டுடன் ஈரான் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது.
7.7 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் 20 பேர் உயிரிழப்பு; மக்கள் பீதி
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை காலை 5.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சுதந்திர தின உரையில் அமெரிக்க அதிபருக்கு புகழாரம்! பாகிஸ்தானின் அடிமைத்தன மனநிலை என விமர்சனம்: ஷெபாஸ் ஷெரீப் பேச்சால் சர்ச்சை
பாகிஸ்தானின் 80வது சுதந்திர தின உரையில் அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குத் திடீரென நன்றி தெரிவித்துப் புகழாரம் சூட்டியுள்ளது பாகிஸ்தானின் மாறாத அடிமைத்தன மனநிலையை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய ஆலோசகராக இந்திய வம்சாவளி கெளதம் ரங்கராஜன் நியமனம்! யார் இவர்?
பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்டிரீட் பிரதமர் அலுவலகத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல ஊடக நிர்வாகியும் மூலோபாய வல்லுநருமான கெளதம் ரங்கராஜன் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
"8 முதல் 10 மணி நேர மின்வெட்டு! முடங்கிய தொழில்கள்; அண்டை நாடான இந்தியாவிடம் உதவி கோரிய வங்காளதேசம்
வங்காளதேச நாடு இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான எரிசக்தி மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது.
ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக மொஹ்சென் ரெசாய் நியமனம்; இவரின் முக்கியத்துவம் என்ன?
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளராகவும், உச்ச தலைவரின் பிரதிநிதியாகவும் முன்னாள் ஐஆர்ஜிசி தளபதி மொஹ்சென் ரெசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுவர்களை பாதுகாக்க கடுமையான விதிகள் தேவை! சோஷியல் மீடியாவிற்கு எதிராகத் திரண்ட அமெரிக்கர்கள்
அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் மீது கடுமையான அரசுக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அந்நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
"நான் பிரதமராக இருக்கும் வரை பாலஸ்தீன நாடு உருவாகாது!" டிரம்பின் 15 அம்ச திட்டத்தை நிராகரித்தார் நெதன்யாகு
காசா முனையில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
சவுதி, துருக்கி, பாகிஸ்தான் கூட்டமைப்பில் எகிப்தும் இணைய வாய்ப்பு; மத்திய கிழக்கில் புது பரபரப்பு
மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அதிகாரப் போட்டியும் பாதுகாப்பு சூழலும் வேகமாக மாறிவரும் வேளையில், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நேட்டோ பாணியிலான புதிய முத்தரப்பு ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன.
உயிருடன் இருக்கிறாரா முஜ்தபா கமேனி? மருத்துவமனையில் அனுமதி என தகவல்; ஈரான் வெளியிட்ட ரகசிய வீடியோ
ஈரானின் உச்ச தலைவர் முஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து சர்வதேச அளவில் பல்வேறு சந்தேகங்களும் வதந்திகளும் பரவி வரும் சூழலில், ஈரானின் அரசு சார்பு செய்தி நிறுவனமான மெஹ்ர், அவரது 12 வினாடிகள் கொண்ட புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 3,323 இந்தியர்கள் நாடு கடத்தல்! கனடாவின் புதிய விதிகளால் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்; பின்னணி என்ன?
கனடா அரசு தனது நாட்டின் குடிவரவு விதிகளையும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளதால், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 3,323 இந்தியர்கள் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
"முஜ்தபா காமேனிக்கு தீவிர சிகிச்சை!" உயிருக்குப் போராடுவதாக தகவல்; ஈரான் அதிபர் அளித்த அதிர்ச்சி அறிக்கை
ஈரானின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்ற முஜ்தபா காமேனியின் உடல்நிலை மிக மோசமடைந்து கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும், அவர் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இஸ்ரேலிய ஊடகமான சேனல் 14 செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்தியா, சீனாவுக்கு 100% வரி அச்சுறுத்தல்!" அமெரிக்க செனட்டில் நிறைவேறிய மசோதா; பின்னணி என்ன?
உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதி திரட்டும் ரஷ்யாவின் எரிசக்தித் துறையை முடக்கும் நோக்கில், அமெரிக்க செனட் சபை ஒரு கடுமையான வரைவு மசோதாவை 86-11 என்ற கணக்கில் அதிக ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது.
ரஷ்யாவுக்குள் 2,000 கிமீ ஊடுருவி உக்ரைன் ட்ரோன் தாக்குதல்! முன்னணி ஆன்லைன் நிறுவனத்தின் கிடங்கில் தீ
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ச்சியான தீவிரமான போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், உக்ரைன் தனது நீண்டதூர ட்ரோன் தாக்குதல் திறனை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரிய தாக்குதல்! ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
லாஸ் வேகாஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி விருப்பங்களுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரான் - ஓமன் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் அமைதி திரும்புமா?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் பதற்றத்திற்கு இடையே, உலகளாவிய வர்த்தகத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி வழியே கப்பல்களை இயக்குவது தொடர்பாக ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் ஒரு வரைவு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
வாஷிங்டன் காட்டுத்தீ அச்சுறுத்தல்: 2.5 லட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரை; அவசரநிலை பிரகடனம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் 2.5 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.
தாக்குதல் ரத்து, அமைதி உடன்படிக்கை தயார்! ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் சம்மதம்? டிரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரான் உடனான 5 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள் எட்டப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த புதிய ராணுவத் தாக்குதல்களைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.