LOADING...
வானவேடிக்கையுடன் 2026 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற உலக நாடுகள்: காண்க!
விண்ணைப் பிளக்கும் வானவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்

வானவேடிக்கையுடன் 2026 புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்ற உலக நாடுகள்: காண்க!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2026
08:49 am

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும் இன்று 2026-ம் ஆண்டு கோலாகலமாக பிறந்தது. துபாயின் புர்ஜ் கலிஃபா முதல் பாரிஸின் ஈபிள் டவர் வரை விண்ணைப் பிளக்கும் வானவேடிக்கைகளுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். உலகின் முதல் நகரமாக நியூசிலாந்தின் ஆக்லாந்து, 2026 ஆம் ஆண்டை கண்கவர் வாணவேடிக்கையுடன் வரவேற்றது. தொடர்ந்து, ஆஸ்திரேலியா, ஆசிய நாடுகள் என வரிசையாக புத்தாண்டை மகிழ்ச்சியாக வரவேற்றனர் மக்கள்.

துபாய்

புர்ஜ் கலிஃபாவில் பிரம்மாண்ட சாதனை

துபாயின் அடையாளமான புர்ஜ் கலிஃபா கோபுரம் வழக்கம்போல இந்த ஆண்டும் மின்னொளி மற்றும் வானவேடிக்கைகளால் ஜொலித்தது. கோபுரத்தின் 365 இடங்களிலிருந்து சுமார் 15,682 வாணவேடிக்கைகள் ஒரே நேரத்தில் வெடிக்கப்பட்டு வானத்தை வண்ணமயமாக மாற்றின. 22,000 கேலன் தண்ணீர், 6,600 விளக்குகளின் பின்னணியில் இசைக்கு ஏற்ப பீய்ச்சி அடிக்கப்பட்ட காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

பாரிஸ்

ஈபிள் டவர் மற்றும் ஆர்க் டி ட்ரையம்பே

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் லட்சக்கணக்கான மக்கள் 'சாம்ப்ஸ்-எலிசீஸ்' (Champs-Élysées) வீதியில் திரண்டனர். ஆர்க் டி ட்ரையம்பே (Arc de Triomphe) நினைவுச் சின்னத்தின் மீது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 'வீடியோ ப்ரொஜெக்ஷன்' மூலம் கவுண்ட்டவுன் காட்டப்பட்டது. நள்ளிரவு 12 மணி ஆனதும் ஈபிள் டவர் மின்னொளியால் ஜொலிக்க, பாரிஸ் நகரம் விழாக் கோலம் பூண்டது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

மின்னொளியில் லண்டனின் பிக் பென்

முக்கிய நிகழ்வுகள்

உலகெங்கும் புத்தாண்டு நிகழ்வுகள்

சிட்னி (ஆஸ்திரேலியா): ஹார்பர் பிரிட்ஜ் அருகே உலகின் முதல் பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின் கொண்டாட்டங்கள் தொடங்கின. ரியோ டி ஜெனிரோ (பிரேசில்): புகழ்பெற்ற கோபகபானா கடற்கரையில் சுமார் 25 லட்சம் மக்கள் திரண்டு 'உலகின் மிகப்பெரிய புத்தாண்டு பார்ட்டியை' கொண்டாடினர். நியூயார்க் (அமெரிக்கா): அமெரிக்காவில், நியூயார்க் நகரம் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. உலகில் அதிகம் பார்க்கப்படும் புத்தாண்டு நிகழ்வுகளில் ஒன்றிற்கு மக்கள் கூடுவதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement