அணுசக்திப் போர் முதல் ஏலியன் வருகை வரை - பாபா வங்காவின் திகிலூட்டும் கணிப்புகள்
செய்தி முன்னோட்டம்
உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா (Baba Vanga), 2026-ம் ஆண்டு குறித்து கணித்துள்ள சில கணிப்புகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 'Nostradamus Of Balkans' என்று அழைக்கப்படும் இவர், எதிர்காலம் குறித்து பல அதிர்ச்சிகரமான தகவல்களை முன்கூட்டியே கூறியுள்ளதாக நம்பப்படுகிறது. இதற்கு முன்னர் அவர் கணித சில நிகழ்வுகளும் உலகெங்கிலும் நடந்ததாக பலரால் நம்பப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த வருடத்திற்கு அவரின் முக்கிய கணிப்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
கணிப்புகள்
2026-க்கான முக்கிய கணிப்புகள்
மூன்றாம் உலகப்போர்: வல்லரசு நாடுகளுக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டு, அது மூன்றாம் உலகப்போராக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக ரஷ்யா - அமெரிக்கா இடையிலான நேரடி ராணுவ மோதல் மற்றும் தைவான் மீது சீனா தொடுக்கப்போகும் தாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். ஆசியாவின் எழுச்சி: 2026-ல் உலக அதிகார மையம் ஆசியாவை நோக்கி நகரும் என்றும், குறிப்பாகச் சீனா மிகப்பெரிய உலக சக்தியாக உருவெடுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார். ரஷ்யாவின் பலமான தலைவர்: சர்வதேச அரசியலை மாற்றியமைக்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த தலைவர் ரஷ்யாவிலிருந்து உருவெடுப்பார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வீழ்ச்சி
இயற்கை சீற்றங்கள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி
இயற்கையின் கோரம்: நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் அதீத காலநிலை மாற்றங்கள் என இயற்கைச் சீற்றங்கள் 2026-ல் மிகக் கடுமையாக இருக்கும். இது பல உள்கட்டமைப்புகளைச் சிதைக்கும். பொருளாதார நெருக்கடி: சர்வதேச அளவில் நாணய மதிப்புகள் வீழ்ச்சியடைந்து, வங்கிகள் முடங்கும் சூழல் ஏற்படும். இதனால் கடுமையான பணவீக்கம் (Inflation) உருவாகி உலகப் பொருளாதாரம் நிலைகுலையும் என அவர் எச்சரித்துள்ளார்.
வேற்றுகிரகவாசிகள்
அறிவியல் மற்றும் வேற்றுகிரகவாசிகள் (Aliens)
ஏலியன்களின் வருகை: 2026 நவம்பரில் ஒரு பிரம்மாண்ட விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் என்றும், இதன் மூலம் மனிதர்களுக்கும் வேற்றுகிரகவாசிகளுக்கும் இடையிலான முதல் தொடர்பு (First Contact) ஏற்படும் என்றும் ஒரு விசித்திரமான கணிப்பு உள்ளது. AI ஆதிக்கம்: செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் மனிதர்களை மிஞ்சி அனைத்து முக்கிய துறைகளையும் ஆக்கிரமிக்கும். இது வேலைவாய்ப்பின்மை மற்றும் மனித அதிகார இழப்பு போன்ற சிக்கல்களை உருவாக்கும்.