LOADING...
அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாத கனடா! இந்தியாவுடன் கைகோர்க்கும் மார்க் கார்னி! வரப்போகும் மெகா டீல்கள் என்னென்ன?

அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாத கனடா! இந்தியாவுடன் கைகோர்க்கும் மார்க் கார்னி! வரப்போகும் மெகா டீல்கள் என்னென்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Jan 26, 2026
07:36 pm

செய்தி முன்னோட்டம்

கனடா பிரதமர் மார்க் கார்னி, வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விதித்துள்ள வர்த்தக வரிகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், கனடா தனது வர்த்தகக் கூட்டணிகளைப் பல்வகைப்படுத்த இந்தியாவுடன் நெருக்கமான உறவை வளர்க்கத் திட்டமிட்டுள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ காலத்துத் தூதரகக் கசப்புகளைத் தாண்டி, இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையே ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

மார்ச் மாத வருகையின் முக்கிய அம்சங்கள்

ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இந்தியா இடையேயான தொழில்நுட்பக் கூட்டணியின் தொடர்ச்சியாக இந்தப் பயணம் அமைகிறது: யுரேனியம் ஒப்பந்தம்: இந்தியாவின் அணுமின் நிலையங்களுக்காக சுமார் 2.8 பில்லியன் கனடிய டாலர் (சுமார் ரூ. 17,200 கோடி) மதிப்புள்ள, 10 ஆண்டுகால யுரேனியம் விநியோக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஆற்றல் மற்றும் எரிசக்தி: கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். CEPA வர்த்தகப் பேச்சுவார்த்தை: இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை 2030க்குள் 50 பில்லியன் டாலராக உயர்த்த, விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் மார்ச் மாதம் தொடங்கும்.

கூட்டணி

புதிய தொழில்நுட்பக் கூட்டணிகள்

வர்த்தகம் மட்டுமின்றி, எதிர்காலத் தொழில்நுட்பங்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங்: ஏஐ தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் கணினிகள் துறையில் புதிய ஆராய்ச்சி ஒப்பந்தங்கள் எட்டப்படலாம். முக்கிய தாதுக்கள்: எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பிற்குத் தேவையான லித்தியம், கோபால்ட் போன்ற தாதுக்களை விநியோகிப்பதில் கனடா முக்கிய பங்கு வகிக்கும். கல்வி மற்றும் கலாச்சாரம்: மாணவர் பரிமாற்றம் மற்றும் விசா நடைமுறைகளை எளிதாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும்.

Advertisement

நெருக்கம்

ஏன் இந்தத் திடீர் நெருக்கம்?

அமெரிக்காவின் பாதுகாப்புவாதக் கொள்கைகள் கனடாவைப் பாதித்துள்ளதால், ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான இந்தியாவை கனடா ஒரு நம்பகமான கூட்டாளியாகப் பார்க்கிறது. "பழைய உலக விதிகள் மாறிவிட்டன, புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்" என்று பிரதமர் மார்க் கார்னி சமீபத்தில் டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

Advertisement