
அணுகுண்டு தாக்குதல் பயிற்சி நடத்திய வடகொரியா: பீதியில் அண்டை நாடுகள்
செய்தி முன்னோட்டம்
வட கொரியா நேற்று ஒரு உருவகப்படுத்தப்பட்ட "தந்திரோபாய அணுசக்தி தாக்குதல்" பயிற்சியை நடத்தியதாக அறிவித்துள்ளது.
அந்த பயிற்சியில் இரண்டு நீண்ட தூர கப்பல் ஏவுகணைகள் அடங்கும் என்று தெரிவிக்கக்ப்பட்டுள்ளது.
இது குறித்த செய்தியை வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், கப்பல் கட்டுதல் மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகளை ஆய்வு செய்தபோது, அரச ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டது.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான இராணுவ பாதுகாப்பை வலுப்படுத்துவதாக அதிபர் கிம் ஜாங் உன் உறுதியளித்திருந்த நிலையில், "எதிரிகளை எச்சரிப்பதற்காக" சனிக்கிழமை அதிகாலை இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாக KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிபவ்க்
தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் எச்சரிக்கை விடுக்கும் வட கொரியா
இந்த பயிற்சியின் போது, போலி அணு ஆயுதங்களை சுமந்து சென்ற இரண்டு கப்பல் ஏவுகணைகள் மேற்குக் கடலின் தீபகற்பத்தை நோக்கி வீசப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வட கொரியாவின் கடற்படைப் படைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக, கடல் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் புக்ஜுங் இயந்திர வளாகம் மற்றும் ஒரு பெரிய வெடிமருந்து தொழிற்சாலை ஆகியவற்றை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டார்.
கடந்த வியாழக்கிழமை வரை, தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கோடைகால இராணுவ கூட்டுப் பயிற்சிகள் நடந்தது. இந்த 11 நாட்கள் கூட்டு பயிற்சி முடிவடைந்திருக்கும் நிலையில், வட கொரியா அணுகுண்டு சோதனை நடத்தி இருப்பது தென் கொரியாவிற்கும் அமெரிக்காவிற்குமான எச்சரிக்கையையாகவே பார்க்கப்படுகிறது.