LOADING...
பக்தர்கள் கூட்டத்தை நிர்வகிக்க இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்
கூட்டத்தை நிர்வகிக்க இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்

பக்தர்கள் கூட்டத்தை நிர்வகிக்க இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 25, 2025
11:10 am

செய்தி முன்னோட்டம்

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்க உள்ளார். இதன்மூலம், பக்தர்கள் வரிசையை நிர்வகிக்க ஏஐ-ஐ பயன்படுத்தும் நாட்டின் முதல் கோயில் என்ற பெருமையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெற்றுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

AI ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை

இந்த புதிய தொழில்நுட்பத்திற்காக, திருமலையில் உள்ள வைகுண்டம் காம்ப்ளெக்ஸ்-இல், செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை (ICC) அமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், கோயில் வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நிகழ்நேர காட்சிகளைப் பகுப்பாய்வு செய்வதாகும். இந்தக் கட்டுப்பாட்டு அறையை நிர்வகிக்க 25-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உதவியுடன், ஏஐ அமைப்பு பல்வேறு முக்கியமான பணிகளைச் செய்யும்.

பயன்கள்

AI-ன் முக்கியப் பயன்கள்

கூட்ட மேலாண்மை:AI தொழில்நுட்பம், பக்தர்கள் வரிசையில் ஏற்படும் கூட்ட நெரிசலை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும். எந்தெந்தப் பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதை உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரிவிக்கும். பாதுகாப்பு மேம்பாடு:சந்தேகப்படும்படியான நபர்கள், குற்றவாளிகள் அல்லது பயங்கரவாதிகளை எளிதாக அடையாளம் காண ஏஐ உதவும். இது ஏற்கனவே உள்ள தரவுத்தளத்துடன் முகங்களை ஒப்பிட்டுப் பார்த்து, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தவிர்க்கும். காணாமல் போனவர்களைக் கண்டறிதல்: கூட்டத்தில் தொலைந்து போன பக்தர்கள், குறிப்பாக குழந்தைகள் அல்லது முதியோர்கள், ஏஐ கேமராக்கள் மூலம் விரைவாகக் கண்டறியப்படுவார்கள். தரிசன நேரத்தை குறைத்தல்:கூட்டத்தை பற்றிய துல்லியமான தகவல்கள் கிடைப்பதால், தேவஸ்தானம் தரிசன ஏற்பாடுகளை திறம்பட திட்டமிட முடியும். இதன் மூலம், பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கும் நேரம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.