LOADING...
இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது

எழுதியவர் Sekar Chinnappan
May 11, 2025
06:41 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ஆயுதப் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை 6:30 மணிக்கு கூட்டு செய்தியாளர் சந்திப்பை தொடங்கியுள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் மூலோபாயக் கண்ணோட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்குக்கின்றனர். இதில் இந்திய ஆயுதப் படைகளின் மூன்று பிரிவுகளிலிருந்தும் மூத்த செயல்பாட்டுத் தளபதிகள் கலந்து கொண்டுள்ளார்கள். இது மிக உயர்ந்த மட்டத்தில் முப்படைகளின் ஒருங்கிணைப்பின் அரிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, இந்திய ராணுவத்தின் சார்பாக லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் (DGMO), விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி (DG Air Ops), கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் (DGNO) ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

செய்தியாளர் சந்திப்பு நேரலை