பயங்கரவாதம் தொடர்ந்தால் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நிச்சயம்: பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய தாக்குதல்களைப் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான இந்தியாவின் அடுத்த இராணுவ நடவடிக்கை 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' என்ற பெயரில் நிச்சயம் தொடரப்படும் என்றும், அப்போது இந்திய ராணுவம் எந்தவிதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்காது என்றும் இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு இந்திய ராணுவம் முழுத் தயார்நிலையில் உள்ளது என்றும், எந்தவொரு கோழைத்தனமான செயலுக்கும் வலிமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவில்லை என்றால், அந்த நாடு தனது "புவியியல் இருப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய" நேரிடும் என்றும் அவர் மிகக் கடுமையான வார்த்தைகளில் எச்சரித்தார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூரின் முக்கிய அம்சங்கள்
ஆபரேஷன் சிந்தூர் முதல் கட்டம்: கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படையின் கூட்டு நடவடிக்கையாக 'ஆபரேஷன் சிந்தூர் 1.0' வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதல் கட்டத் தாக்குதலின்போது, இந்தியா தீவிரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து, இந்திய ராணுவம் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடித்தது. எனினும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்ந்தால், "ஆபரேஷன் சிந்தூர் 2.0" எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்றும், ஆனால் இனிவரும் நடவடிக்கைகளில் ராணுவம் இதுபோன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றாது என்றும் ஜெனரல் திவேதி தற்போது திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.