LOADING...
'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, CISF வீரர்கள் முறியடித்துள்ளனர்

'ஆபரேஷன் சிந்துார்'இன் போது உரி நீர்மின் நிலையத்தை தாக்க முற்பட்ட பாகிஸ்தான்; முறியடித்த CISF படை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 26, 2025
10:40 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி நீர்மின் திட்டங்களை (Uri Hydro Electric Power Projects - UHEP-I & II) இலக்கு வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் முறியடித்துள்ளனர். கடந்த மே 7 அன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய இந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு, LoC அருகில் அமைந்துள்ள உரி நீர்மின் திட்டங்களை பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர்.

CISF-இன் வீரம்

சைலண்டாக சம்பவம் செய்த CISF வீரர்களுக்கு விருது அறிவிப்பு

நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) ஒரு பிரிவினர், சவாலான சூழலில் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி, நடக்கவிருந்த பெரும் விபத்தை வெற்றிகரமாகத் தடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது, அப்பகுதியில் வசித்து வந்த சுமார் 250 பொதுமக்களை CISF வீரர்கள் பத்திரமாக வெளியேற்றி, அவர்கள் எந்தவித அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்தனர். இந்த தாக்குதலை தடுத்து, தேசத்தின் உள்கட்டமைப்பை வீரத்துடன் பாதுகாத்ததற்காக, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 19 CISF வீரர்களுக்கு அவர்களின் DG's Disc வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் அசாத்திய துணிச்சலைக் கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது.