LOADING...
பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணை விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு அதிநவீன AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 09, 2025
04:37 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையேயான உறவுகள் மேம்பட்டு வருவதைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக, AIM-120 மேம்பட்ட நடுத்தர-வரம்பு வான் முதல் வான் ஏவுகணை (AMRAAM) விற்பனைக்கான ஆயுத ஒப்பந்தத்தில், பாகிஸ்தானையும் பெறுநராக அமெரிக்காவின் போர் துறை (DoW) சேர்த்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் சமீபத்திய வெள்ளை மாளிகை வருகை மற்றும் ஒரு அரிய வகை கனிம ஒப்பந்தத்தின் கீழ் கனிம மாதிரிகளின் முதல் சரக்கு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் வந்துள்ளது. ரேதியான் நிறுவனத்துடன் (Raytheon) கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், $41.6 மில்லியனுக்கும் அதிக மதிப்புடையது. இது ஏவுகணையின் C8 மற்றும் D3 வகைகளை உற்பத்தி செய்வதற்கானதாகும்.

இந்தியா 

இந்தியாவுக்கு சிக்கலா?

AIM-120 ஏவுகணை, உலகின் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பார்வைக்கு அப்பாற்பட்ட-வரம்பு (BVR) வான் சண்டை ஆயுதங்களில் ஒன்றாகும். இது ஏவிவிட்டு மறந்துவிடும் (fire-and-forget) திறன் கொண்டது. இந்த ஏவுகணைகளை பாகிஸ்தான் விமானப்படையின் (PAF) F-16 போர் விமானங்களுடன் மட்டுமே மட்டுமே இயக்க முடியும். இந்த அறிவிப்பு, இந்திய விமானப்படையின் MiG-21 விமானத்தை 2019 பிப்ரவரியில் வீழ்த்துவதற்கு PAF இந்த ஏவுகணையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அதன் F-16 போர் திறன்களில் பெரிய மேம்பாடுகள் ஏற்படலாம் என்ற யூகத்தை கிளப்பியுள்ளது. எனினும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பயன்படவில்லை என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதனால், இந்த விற்பனை இந்தியாவிற்கு பெரிய அளவில் பாதிக்கப்பைக் கொடுக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.