LOADING...
உயிர் காக்க சென்ற ஏர் ஆம்புலன்ஸ்; நொடியில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி
வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர்

உயிர் காக்க சென்ற ஏர் ஆம்புலன்ஸ்; நொடியில் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
09:57 am

செய்தி முன்னோட்டம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விமானம், சாத்ரா மாவட்டத்தின் அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று இரவு 7:11 மணிக்கு ராஞ்சியில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், 7:34 மணியளவில் கொல்கத்தா விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டது. அப்போது வானிலை மோசமாக இருப்பதால் மாற்று பாதையில் செல்ல அனுமதி கோரியது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ரேடார் தொடர்பிலிருந்து விமானம் மறைந்தது. இடியுடன் கூடிய மழையே இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பின்னணி

இதயத்தை உலுக்கும் பின்னணி

உயிரிழந்தவர்களில் லாதேஹார் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர். தனது ஹோட்டலில் ஏற்பட்ட மின் விபத்தில் தீக்காயமடைந்த சஞ்சய்யை, டெல்லி கங்காராம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். மிகவும் ஏழ்மையான நிலையிலும், சுமார் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இந்த ஏர் ஆம்புலன்ஸை அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், விதிவசமாக நோயாளி, அவரது மனைவி மற்றும் உறவினர் என மூவரும் விபத்தில் உயிரிழந்தனர். விமானம் விழுந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால், உடல்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) மற்றும் 'ரெட்பேர்ட்' (RedBird) நிறுவனத்தின் அதிகாரிகள் பாதுகாப்பு தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisement