LOADING...
லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்
சொந்த மகனே தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லக்னோவில் கொடூரம்: தந்தையை சுட்டுக்கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்லில் அடைத்த கல்லூரி மாணவன்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2026
09:07 am

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் உயர்தரப் பகுதியான ஆஷியானாவில், 21 வயது கல்லூரி மாணவன் ஒருவன் தனது தந்தையை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபான வியாபாரம் மற்றும் ஆய்வகம் நடத்தி வந்த 49 வயதான மன்வேந்திர சிங் என்பவருக்கும், அவரது மகன் அக்ஷத் சிங்கிற்கும் இடையே படிப்பது தொடர்பாக தொடர்ச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. பி.காம் படித்து வந்த அக்ஷத்தை, 'நீட்' (NEET) தேர்வு எழுதும்படி தந்தை கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷத், பிப்ரவரி 20-ஆம் தேதி அதிகாலை தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

சதி

திட்டமிட்ட சதி

கடந்த ஆண்டு மீரட்டில் நடந்த ஒரு கொலை சம்பவத்தை சமூக வலைதளங்களில் படித்து பார்த்த அக்ஷத், அதே பாணியில் தனது தந்தையின் உடலைச் சிதைத்துள்ளார். உடலின் தலை மற்றும் உடல் பகுதியை ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்லில் அடைத்து வைத்தவர், கை மற்றும் கால்களை தொலைதூரப் பகுதியில் வீசியுள்ளார். இந்த கொடூர செயலை நேரில் பார்த்த தனது 11-ஆம் வகுப்பு படிக்கும் தங்கையையும் அவர் மிரட்டி வாயடைக்கச் செய்துள்ளார்.

கைது

சிக்கியது எப்படி?

தந்தை காணவில்லை எனத் தானே நாடகமாடிய அக்ஷத், காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சிக்கிக்கொண்டார். விசாரணையின் முடிவில் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். மன்வேந்திர சிங்கின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்ஷத் கைது செய்யப்பட்டு, உடலின் மற்ற பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement