Loading...
39 வயதில் அபாரம்! உலகக்கோப்பையில் 1958 சாதனையைத் தகர்த்த லியோனல் மெஸ்ஸி
உலகக்கோப்பையில் லியோனல் மெஸ்ஸி புதிய உலக சாதனை

39 வயதில் அபாரம்! உலகக்கோப்பையில் 1958 சாதனையைத் தகர்த்த லியோனல் மெஸ்ஸி

எழுதியவர் Sekar Chinnappan
Jul 16, 2026
11:22 am

செய்தி முன்னோட்டம்

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஸ்பெயின் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க அர்ஜென்டினா தயாராகி வரும் வேளையில், அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி கால்பந்து வரலாற்றிலேயே இதுவரை எவரும் படைக்காத ஒரு மாபெரும் உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

சாதனை முறியடிப்பு

68 ஆண்டுகால சாதனையை முறியடித்த அர்ஜென்டினா நாயகன்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் என்சோ பெர்னாண்டஸ் மற்றும் லௌடாரோ மார்டினெஸ் ஆகியோர் அடித்த இரண்டு கோல்களுக்கும் அசிஸ்ட் செய்து மெஸ்ஸி அசத்தினார்.

இதன் மூலம், 39 வயது 25 நாட்களேயான லியோனல் மெஸ்ஸி, உலகக்கோப்பை வரலாற்றிலேயே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மிக வயதான அவுட்ஃபீல்ட் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக 1958 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சுவீடன் நாட்டின் கன்னர் கிரென் (37 வயது 241 நாட்கள்) படைத்திருந்த சாதனையை 68 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி தற்பொழுது முறியடித்துள்ளார்.

வயதான வீரர்கள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடிய வயதான வீரர்கள்

கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற மிக வயதான முதல் ஐந்து அவுட்ஃபீல்ட் வீரர்களின் விபரம் இதோ:

லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) - 39 வயது 25 நாட்கள் (2026)

கன்னர் கிரென் (சுவீடன்) - 37 வயது 241 நாட்கள் (1958)

நில்டன் சாண்டோஸ் (பிரேசில்) - 37 வயது 32 நாட்கள் (1962)

ஒலிவியர் ஜிரார்ட் (பிரான்ஸ்) - 36 வயது 79 நாட்கள் (2022)

மிரோஸ்லாவ் குளோஸ் (ஜெர்மனி) - 36 வயது 34 நாட்கள் (2014)

ADVERTISEMENT

அரையிறுதிப் போட்டி

அரையிறுதிப் போட்டியிலும் மெஸ்ஸி நிகழ்த்திய அபார சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போதே, உலகக்கோப்பை வரலாற்றில் இறுதி நான்கு அணிகள் மோதும் சுற்றில் களம் கண்ட மிக வயதான அவுட்ஃபீல்ட் வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றிருந்தார்.

இதன் மூலம் 1958 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் ஃபிரிட்ஸ் வால்டர் (37 வயது 236 நாட்கள்) வைத்திருந்த முந்தைய சாதனையை மெஸ்ஸி முறியடித்தார்.

இந்தப்பட்டியலில் சுவீடனின் கன்னர் கிரென், குரோஷியாவின் லூகா மோட்ரிக் (37 வயது 95 நாட்கள்) மற்றும் பிரேசிலின் நில்டன் சாண்டோஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ADVERTISEMENT

மாரடோனா சாதனை

மாரடோனாவின் வரலாற்று சாதனைப் பட்டியலில் இணைந்த மெஸ்ஸி

இந்த வெற்றிகளின் மூலம் லியோனல் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனாவிற்குப் (1986, 1990) பிறகு, தனது அணியைத் தொடர்ந்து இரண்டு முறை உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு வழிநடத்திச் சென்ற இரண்டாவது அர்ஜென்டினா கேப்டன் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.

தனது 39 வயதிலும் சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத ஆதிக்கத்தை செலுத்தி வரும் மெஸ்ஸியின் இந்த சாதனைப் பயணம், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT