LOADING...
பாகிஸ்தானை எச்சரிக்கவே கிரானா ஹில்ஸில் இந்தியா தாக்குதல் நடத்தியது? OSINT ஆய்வாளர் தகவல்
பாகிஸ்தானை எச்சரிக்கவே கிரானா ஹில்ஸில் இந்தியா தாக்குதல் நடத்தியது?

பாகிஸ்தானை எச்சரிக்கவே கிரானா ஹில்ஸில் இந்தியா தாக்குதல் நடத்தியது? OSINT ஆய்வாளர் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 21, 2025
08:11 pm

செய்தி முன்னோட்டம்

ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) நிபுணர் டேமியன் சைமன் பகுப்பாய்வு செய்த செயற்கைக்கோள் படங்களின்படி, மே 2025 இல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் கிரானா மலைகளில் இருப்பதாக நம்பப்படும் அணு ஆயுதங்கள் மீது எச்சரிக்கைத் தாக்குதலை இந்தியா நடத்தியிருக்கலாம் என கூறியுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிரானா மலைப் பகுதியை எந்தத் தாக்குதலும் குறிவைக்கவில்லை என்று இந்திய ராணுவம் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில் இந்தக் கூற்று வந்துள்ளது. தி இன்டெல் லேபில் பணிபுரிந்ததற்காக அறியப்பட்ட டேமியன் சைமன், ஜூன் 2025 இல் புதுப்பிக்கப்பட்ட கூகுள் எர்த் படங்களை வெளியிட்டார். கிரானா மலைகளில் ஒரு தாக்குதலின் இடத்தையும் அருகிலுள்ள சர்கோதா விமான தளத்தில் ஓடுபாதைகளை சரிசெய்ததையும் சுட்டிக்காட்டினார்.

சேதம்

சேதத்தின் அளவு

இணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சைமன், சேதம் மேலோட்டமாகத் தோன்றியது என்றும், நிலத்தடி ஊடுருவலின் அறிகுறிகள் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் தாக்குதல் அணுசக்தி உள்கட்டமைப்பை சேதப்படுத்தும் முயற்சி அல்ல என்றும் மாறாக ஒரு மூலோபாய எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு கொடுப்பதாக அமைந்துள்ளது என தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கிரானா ஹில்ஸ் அருகே புகை மூட்டங்களைக் காட்டும் ஊகங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத காட்சிகள் நிறைந்துள்ளன. அணுசக்தி கட்டளை மையங்களுக்கு அருகாமையில் இந்தத் தாக்குதல்கள் இருப்பது இந்தியாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்கும் திறன் பற்றிய வலுவான செய்தியை அனுப்பியதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.