LOADING...
நாடாளுமன்றத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' விவாதம் இன்று தொடக்கம்
'ஆபரேஷன் சிந்தூர்' விவாதம் இன்று தொடக்கம்

நாடாளுமன்றத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' விவாதம் இன்று தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 28, 2025
09:36 am

செய்தி முன்னோட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்று முதல் முக்கிய விவாதம் தொடங்குகிறது. எனினும், இது குறித்து வெளிநாடுகளுக்கு பயணித்த நாடாளுமன்ற சிறப்பு MP-க்கள் குழுவின் தலைவரும், காங்கிரஸ் எம்.பி யுமான சசி தரூருக்கு இதில் பேச அனுமதி கிடைக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, "சசி தரூர் இந்த விவாதத்தில் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை. பேச விரும்பும் எம்.பிக்கள் சிபிபி (Congress Parliamentary Party) அலுவலகத்துக்கே விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தரூர் இதுவரை அந்தக் கோரிக்கையை விடுத்திருக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது.

விவாதம்

விவாதத்தை யார் தொடங்கப் போகிறார்கள்?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இந்த விவாதத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் நேரடி பங்கேற்பும் முடிவு செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் தரப்பில் விவாதத்தை யார் தொடங்கப்போகிறார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ராகுல் காந்தி ஒரு ஆரம்ப பேச்சாளராக கருதப்பட்டாலும், கடந்த 2023 நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் அவர் பதிலாக கௌரவ் கோகோய் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கிய அனுபவம் குறிப்பிடத்தக்கது.

காலம்

இரண்டு நாட்கள்- 16 மணி நேரம் விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான இந்த விவாதம் 16 மணி நேரம் நடைபெறும் என நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. விவாதத்தில் ஏப்ரல் 22 அன்று 26 பொதுமக்கள் உயிரிழந்த தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் பதில்கள், பாதுகாப்புத் தோல்விகள், பாகிஸ்தானுடன் ஏற்படும் மோதல்கள் மற்றும் சர்வதேச அரசியல் களத்தில் இந்தியாவின் நிலை பற்றி பேசப்பட உள்ளது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான மத்தியஸ்தம் குறித்து தனது பங்கை பற்றி முக்கியமாக தம்பட்டம் அடித்து வருவதையும், அதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்ததையும் முன்னிறுத்தி, எதிர்க்கட்சியினர் பேசக்கூடும். 'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரம், உள்நாட்டுப் பாதுகாப்பு, பாகிஸ்தான் தந்திரங்கள், இந்தியாவின் விளக்கம் அனைத்தும் இன்று நாடாளுமன்ற அவை நேரத்தின் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன