ஜெய்ஷ் இ முகமது: செய்தி
தற்கொலைப் படை நடவடிக்கைகளுக்காக 5,000 பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்: ஜெய்ஷ்-இ-முகமது
ஜெய்ஷ்-இ-முகமது (JeM) என்ற பயங்கரவாத அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட அதன் மகளிர் பிரிவான ஜமாத் உல் மோமினாத்தில் 5,000க்கும் மேற்பட்ட பெண்களை சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
புல்வாமா பாணியில் செங்கோட்டை தாக்குதல்? ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தகவல்
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த சமீபத்திய கார் குண்டுவெடிப்புத் தாக்குதல், புல்வாமா தாக்குதலின் பாணியைப் போலவே உள்ளது என்றும், இது ஜெய்ஷ்-இ-முகமது (Jaish-e-Mohammad) பயங்கரவாத அமைப்பின் தெளிவான அடையாளம் என்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் தெரிவித்துள்ளார்.
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெய்ஷ், இந்தியாவை தாக்க நன்கொடைகளை நாடுகிறதாம்
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான ஜெய்ஷ்-இ-முகமது, இந்தியாவிற்கு எதிரான புதிய "பிதாயீன்" (தற்கொலை) தாக்குதலுக்கு நிதி தேடுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV இடம் தெரிவித்தன.
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: டாக்டர் உமர் 'ஷூ வெடிகுண்டு' தீவிரவாதியா?
டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பமாக, தற்கொலை போராளி டாக்டர் உமர் உன் நபி தனது காலணியில் (Shoe) வெடிகுண்டை மறைத்து வைத்துத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
செங்கோட்டை குண்டு வெடிப்பு: ஜெய்ஷ் தீவிரவாத குழுவின் "ஆபரேஷன் டி-6" சதித்திட்டம் அம்பலம்
டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் இணைந்த ஒரு குழு, வரும் டிசம்பர் 6 அன்று பெரிய அளவிலான ஃபிதாயீன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது
கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாதச் செயல்" என்று உறுதிப்படுத்தியுள்ளது.
ஃபரிதாபாத்தில் கைது செய்யப்பட்ட பெண் மருத்துவர் ஜெய்ஷ் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தவர்
ஃபரிதாபாத்தில் பயங்கரவாத மாட்யூல் தொடர்பாக கைது செய்யப்பட்ட லக்னோவை சேர்ந்த மருத்துவர் டாக்டர் ஷாஹீனா ஷாஹித், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் மகளிர் பிரிவின் தலைவராக இருந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் NDTV யிடம் தெரிவித்தன.
டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: ஜெய்ஷ்-இ-முகமது தொடர்பு குறித்து தீவிர விசாரணை; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாதம் பயில பெண்களுக்கான ஆன்லைன் கோர்ஸ்: ₹500 கட்டணத்தில் தொடங்கியது JeM
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் புதிய பெண்கள் பிரிவான ஜமாத் உல்-முகமதுவுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக "துஃபத் அல்-முகமது" என்ற ஆன்லைன் பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பில் பெண்கள் பிரிவு ஜமாத்-உல்-மோமினாத் உருவாக்கம்
மசூத் அஸார் தலைமையிலான பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தீவிரவாத அமைப்பு, தனது செயல்பாடுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக, தனது முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் என்ற பெயரில் உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளது.
மும்பை, நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான்: ஒப்புக்கொண்டது JeM
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த பயங்கரவாதி ஒருவர், டெல்லி மற்றும் மும்பையில் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தியதில் தனது தலைவர் மசூத் அசாரின் நேரடி தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
மசூத் அசாரின் குடும்பம் ஆபரேஷன் சிந்தூரில் சிதைந்ததாக JeM ஒப்புக்கொள்கிறது
ஜெய்ஷ் -இ-முகமது (JeM) அமைப்பின் உயர்மட்ட தளபதி மசூத் அசாரின் குடும்பத்தினர் பஹாவல்பூரில் நடந்த தாக்குதல்களில் "துண்டு துண்டாக" சிதைந்ததாக அதன் தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் JeM தீவிரவாதி மசூத் அசார் தென்பட்டதாக உளவுத்தகவல்
இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உலவுவதாக கூறப்படுகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்'-இல் சொந்தங்களை இழந்த தீவிரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் அரசு இழப்பீடு வழங்கும் எனத்தகவல்
ஜெய்ஷ்-இ-முகமது (JEM) அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு ₹14 கோடி இழப்பீடு வழங்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.