LOADING...
ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்
சத்ரூ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது

ஜம்மு-காஷ்மீர் கிஷ்ட்வார் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2026
04:53 pm

செய்தி முன்னோட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வாரின் சத்ரூ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. அடர்ந்த காடுகள் மற்றும் செங்குத்தான மலைப்பகுதிகள் கொண்ட இந்த நிலப்பரப்பில், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 முதல் 3 பேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திங்களன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையின் போது, பயங்கரவாதிகள் தங்குவதற்கு பயன்படுத்திய ஒரு பெரிய ரகசிய மறைவிடம் கண்டறியப்பட்டது. அங்கிருந்து குளிர்காலத்திற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த அதிக அளவிலான ரேஷன் பொருட்கள், நெய், சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பு ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

வீர மரணம்

தீவிரவாதிகள் தாக்கியதில் ஒரு ராணுவ வீரர் மரணம்

பயங்கரவாதியினரின் மறைவிடம் தளம் பல பேர் தங்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மோதலின் போது பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு தாக்குதலில் 8 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில், சிறப்புப் படையைச் சேர்ந்த ஹவில்தார் கஜேந்திர சிங் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்திற்கு ராணுவத்தின் 'ஒயிட் நைட் கார்ப்ஸ்' (White Knight Corps) அதிகாரிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போது ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் அப்பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு, பயங்கரவாதிகள் தப்பிவிடாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஜம்மு பிராந்தியத்தில் நடைபெறும் மூன்றாவது முக்கிய மோதல் இதுவாகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement