LOADING...
டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது
'ஜெய்ஷ்' குழு 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது

டாக்டர் உமர் தலைமையில் 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்' குழு அயோத்தியா உட்பட 4 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 13, 2025
12:06 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த நவம்பர் 10 அன்று டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக "பயங்கரவாதச் செயல்" என்று உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில், ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு இயங்கிய, மருத்துவர்கள் உள்ளிட்ட 8 பேர் கொண்ட 'ஜெய்ஷ்-இ-முகமது' (JeM) பயங்கரவாதக் குழுவின் மாபெரும் சதித் திட்டம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் குழுக் கூட்டம், இந்த வெடிப்பைத் தேசவிரோத சக்திகள் நடத்திய "கொடுமையான பயங்கரவாதச் செயல்" என்று அறிவித்தது. எந்தவிதமான பயங்கரவாதத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற 'பூஜ்ய சகிப்புத்தன்மை' கொள்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சதித் திட்டம்

சதித் திட்டம் மற்றும் இலக்குகள்

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள், மக்கள் கூடும் முக்கியப் பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். நாட்டின் முக்கிய தினங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்புவதே இலக்கு. திட்டமிட்ட இலக்குகள்: அயோத்தி: ராமஜென்மபூமி திறப்பு விழாவின்போது விஷம் கலந்த பிரசாதம் மூலம் இரசாயனத் தாக்குதல். டெல்லி: இந்தியா கேட், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் (Malls) போன்ற இடங்களை தாக்க திட்டமிட்டிருந்ததாக Times of India செய்தி தெரிவிக்கின்றன.

பயங்கரவாதக் குழு

பயங்கரவாதக் குழுவின் அமைப்பு மற்றும் தொடர்பு

கைது செய்யப்பட்ட டாக்டர் முஸம்மில் ஷகீல், டாக்டர் அடீல் அஹ்மத் மற்றும் பெண் மருத்துவர் டாக்டர் ஷஹீன் ஷாஹித் உட்பட மொத்தம் 8 பேர் கொண்ட இந்தக் குழுவில், பலர் மருத்துவர்கள் ஆவர். தங்கள் மருத்துவத் தகுதியைப் பயன்படுத்தி இரசாயனங்களைப் பெறுவதற்கு இவர்கள் உதவியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் தொலைபேசிகளை ஆய்வு செய்ததில், அவர்கள் பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் பயங்கரவாதக் குழுவின் தலைவர்களுடன் டெலிகிராம் செயலி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. முக்கியச் சந்தேக நபர்களான டாக்டர் உமர் நபி மற்றும் டாக்டர் முஸம்மில் ஷகீல் கணாய் ஆகியோர் கடந்த 2022ஆம் ஆண்டில் துருக்கிக்கு சென்று, அங்கு தங்கள் அமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பயிற்சி பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்கொலை தாக்குதல்

தாக்குதல் தோல்வி மற்றும் தற்கொலை தாக்குதல் (ஃபிடாயீன்)

ஜம்மு காஷ்மீர், உ.பி. காவல்துறை மற்றும் மத்திய உளவு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையால் ஃபரிதாபாத் குழுவின் சதித் திட்டம் முன்கூட்டியே அம்பலமானது. கைதுகள் குறித்துத் தெரிந்துகொண்ட குழுவின் முக்கியச் சந்தேக நபரும், கார் ஓட்டுநருமான டாக்டர் உமர் உன் நபி, கைதுக்கு பயந்து பதற்றத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரை டெல்லி செங்கோட்டை அருகே வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் (ஃபிடாயீன்) நடத்தினார். இதன் மூலம், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தொடர் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.