தீவிரவாதம்: செய்தி
'26/11 திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தேன்': பாகிஸ்தான் உளவாளியாக இருந்ததை ஒப்புக்கொண்ட தஹாவூர் ராணா
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சதிகாரரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நடத்திய விசாரணையின் போது திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அபோட்டாபாத் முதல் பூஞ்ச்-ராஜோரி வரை: பஹல்காம் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் எப்படி நுழைந்தனர்
ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதிகள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) உறுதிப்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர்; தொடரும் துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூவின் சிங்போரா பகுதியில் வியாழக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல்
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் "இடைநிறுத்தப்பட்டுள்ளது" என்றும் "முடிவடையவில்லை" என்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் வலியுறுத்தியுள்ளார்.
கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அமீர் நசீர் வானி, தனது தாயார் வீடியோ காலில் உணர்ச்சிவசப்பட்டு விடுத்த வேண்டுகோளை மீறி சரணடைய மறுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்
ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
செவ்வாய்க்கிழமை ஷோபியனின் ஜின்பதர் கெல்லர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி
இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில், இன்று மாலை 5:00 மணி முதல் நிலம், வான் மற்றும் கடல் வழியாக அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டன.
எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்; இந்தியாவின் கொள்கையில் மாற்றம் என தகவல்
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, இந்தியாவுக்கு எதிராக எதிர்காலத்தில் நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போர் நடவடிக்கையாக கருதப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை முறியடித்தது.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
'ஒவ்வொரு அநீதிக்கும் பழிவாங்குவோம்': ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர் அல்-கொய்தா மிரட்டல்
'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தின் கீழ் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய வான்வழித் தாக்குதல்களைக் கண்டித்து, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொடரும் ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனத்தகவல்
புதன்கிழமை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்த அதே வேளையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'ஆபரேஷன் சிந்தூர்' இன்னும் தொடர்வதாக வலியுறுத்தினார்.
ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் தாக்கியது.
பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு
பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: இன்று கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் இந்திய அரசின் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை அடுத்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: NIA 3D மேப்பிங் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது; அது என்ன?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சம்பவ இடத்தில் முப்பரிமாண அல்லது 3D மேப்பிங் செய்தது.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்து அறிக்கை
நாட்டையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலில் சந்தேகப்படும் நபர் மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதியாக திரும்பினார்
சமீபத்திய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சந்தேக நபரான ஆதில் அகமது தோக்கர், பாகிஸ்தானிலிருந்து திரும்பியபோது 3-4 தீவிரவாதிகளுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை இஸ்லாமியத்திற்கு விரோதமானது என்று ஜும்மா மசூதி ஷாஹி இமாம் கண்டனம்
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் சையத் அகமது புகாரி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதிக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்ட தண்டனை வழங்கப்படும்": சூளுரைத்த பிரதமர்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின் தனது முதல் மற்றும் கடுமையான எதிர்வினையாற்றலில், பிரதமர் மோடி, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களுக்கு அவர்களின் கற்பனைக்கு எட்டாத தண்டனை கிடைக்கும் என்று சூளுரைத்தார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் படுகாயம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் நேற்று நண்பகல் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாகிஸ்தான் ரயில் கடத்தல், 100க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த தீவிரவாதக்குழு
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத போராளிகள் செவ்வாய்க்கிழமை சுமார் 400 பயணிகளுடன் ஒரு பயணிகள் ரயிலைத் தாக்கினர்.
26/11 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
மும்பை தாக்குதல் குற்றவாளி தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டக்காரர்களின் கூட்டத்தை டிரக் மூலம் தாக்கி 15 பேரைக் கொன்றது மற்றும் டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 2) கண்டனம் தெரிவித்தார்.
நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதல்: டிரக்கில் இருந்து FBI கண்டுபிடித்தது என்ன?
புத்தாண்டு தினத்தன்று நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் ட்ரக்கை ஒட்டி வந்த நபரின் அடையாளத்தை சட்ட அமலாக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
அமெரிக்காவில் டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லாவின் சைபர் டிரக்; தீவிரவாத தாக்குதலா?
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்பின் லாஸ் வேகாஸ் ஹோட்டலுக்கு வெளியே பட்டாசுகளை ஏற்றிச் சென்ற டெஸ்லா சைபர்ட்ரக் வாகனம் தீப்பிடித்து வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இருந்த அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார்
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு சதி செய்தவரும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவருமான ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி டிசம்பர் 27, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தானில் மாரடைப்பால் மரணமடைந்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில், டாக்டர் மற்றும் 6 பொதுமக்களை கொன்றதற்கு பொறுப்பேற்று கொண்ட தீவிரவாத அமைப்பு
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான எதிர்ப்பு முன்னணி (The Resistance Front - TRF) ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மருத்துவர் மற்றும் ஆறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஐஎம்எப்பை விட அதிகமாவே கொடுத்திருப்போம்; பாகிஸ்தானை கிண்டல் செய்த ராஜ்நாத் சிங்
இந்தியாவுடன் நட்புறவைப் பேணியிருந்தால், சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) கோருவதை விட, பாகிஸ்தானுக்கு இந்தியா அதிக நிதியை வழங்கியிருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அண்டை நாடான பாகிஸ்தானை கிண்டல் செய்தார்.
சிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அமெரிக்க இராணுவம், சிரியாவில் இந்த மாதம் இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளது.
மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு
தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து மத்திய உளவுத்துறையின் அலெர்ட்டை அடுத்து, மும்பை போலீசார், மத வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பரபரப்பான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு
எல்லையில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால் மற்றும் துணை சிறப்பு டிஜி (மேற்கு) ஒய்.பி. குரானியா ஆகியோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது.
ஜம்முவில் பயங்கரவாதிகளை வேட்டையாட 500 பாரா கமாண்டோக்கள் குவிப்பு
தீவிரவாத பயிற்சி பெற்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை எதிர்த்துப் போராட ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவம் சுமார் 500 பாரா சிறப்புப் படை கமாண்டோக்களை நிறுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழு அளவையும் பயன்படுத்துங்கள்: பிரதமர் மோடி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பயங்கரவாத தாக்குதல்களை சந்தித்து வரும் நிலையில், அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்ய, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்.
ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல்
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் தற்காலிக செயல்பாட்டு தளத்தில் (TOB) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் பஸ் தாக்குதலை விசாரிக்க களமிறங்கிய NIA; தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரம்
நேற்று, ஜூன் 9ஆம் தேதி மாலை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து புனித தலத்தில் இருந்து பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.