ஜம்முவின் தோடாவில் ராணுவ முகாம் மீது தாக்குதல்; 3 நாட்களில் மூன்றாவது பயங்கரவாத தாக்குதல்
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவத்தின் தற்காலிக செயல்பாட்டு தளத்தில் (TOB) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். ரியாசி மற்றும் கதுவாவுக்குப் பிறகு, ஜம்மு பகுதியில் கடந்த மூன்று நாட்களில் நடந்த மூன்றாவது பயங்கரவாதத் தாக்குதல் இதுவாகும். "ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மேலும் ஒரு குடிமகன் காயமடைந்தார், ஆனால் இப்போது ஆபத்தில்லை. நடவடிக்கை இன்னும் தொடர்கிறது, மேலும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்" என்று ஜம்மு ஏடிஜிபி ஆனந்த் ஜெயின் கூறினார்.
தொடரும் எல்லை தாண்டிய தீவிரவாதிகள் தாக்குதல்
கதுவா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, தோடா மாவட்டத்தில் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், சர்வதேச எல்லைக்கு (ஐபி) அருகில் உள்ள ஹிராநகர் செக்டாரில் அமைந்துள்ள சைதா சுகல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஜூன் 9 அன்று, பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர். ஆதாரங்களின்படி, மே-4 அன்று பூஞ்சில் இந்திய விமானப்படை கான்வாய் மீது குறிவைத்த பயங்கரவாதிகள் தான் இந்த சதி வேலைக்கு காரணம்