
கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அமீர் நசீர் வானி, தனது தாயார் வீடியோ காலில் உணர்ச்சிவசப்பட்டு விடுத்த வேண்டுகோளை மீறி சரணடைய மறுப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
டிராலின் நாதிர் கிராமத்தில் நடந்த இந்த மோதலில், புல்வாமாவைச் சேர்ந்த அமீர் நசீர் வானி, ஆசிப் அகமது ஷேக் மற்றும் யாவர் அகமது பட் ஆகிய மூன்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சண்டை தொடங்குவதற்கு முன்பு, குழு மறைந்திருந்த வீட்டிலிருந்து அமீர் ஒரு வீடியோ அழைப்பை மேற்கொண்டார்.
காட்சிகளில், அமீர் ஒரு ஏகே 47 துப்பாக்கியை ஏந்தியிருப்பதை பார்க்க முடிந்தது. அவரது தாயும் சகோதரியும் சரணடையுமாறு வற்புறுத்தினார்கள்.
மறுப்பு
சரணடைய மறுப்பு
எனினும், தாயின் வேண்டுகோளை நிராகரித்த தீவிரவாதி, "இந்திய ராணுவம் முன் வரட்டும், பிறகு நான் பார்க்கிறேன்" என்று மறுத்துவிட்டார்.
அழைப்பின் போது அமீர் சக பயங்கரவாதி ஆசிப் அகமது ஷேக்கின் சகோதரியிடமும் பேசினார்.
இதற்கிடையே, பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், அந்தக் குழுவை சரணடையச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் பயங்கரவாதிகள் முன்னேறி வந்த படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதிலடி கொடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதியில் 48 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டாவது என்கவுன்டர் இதுவாகும். இரண்டு நாட்களுக்கு முன்பு, ஷோபியன் மாவட்டத்தின் கெல்லர் பகுதியில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வீழ்த்தினர்.
இரு நடவடிக்கைகளிலிருந்தும் பல ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
ட்விட்டர் அஞ்சல்
காணொளி
#terrorist killed in #Tral #Encounter was seen talking to his mother before the encounter #BREAKING #Encounter #terrorists #Nadar #Tral #pulwama #SouthKashmir #IndianArmy #Pakistan #PulwamaAttack #Pulwama
— Indian Observer (@ag_Journalist) May 15, 2025
Aamir Nazir Wani Aamir's mother is telling him to surrender but Aamir… https://t.co/a58CwlyrNw pic.twitter.com/zrbilW8BZ2