
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் நிலைமை காரணமாக, நடைபெறும் ஐபிஎல் 2025 தொடர் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி அணிகள் இடையிலான போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பிசிசிஐ நடத்திய அவசர ஆலோசனைக்கு பிறகு, மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை 57 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள அனைத்து போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அச்சுறுத்தல்
மர்ம நபர்கள் ஈ-மெயில் மூலம் அச்சுறுத்தல்
சென்னை சேப்பாக்கம் மைதான அலுவலகத்திற்கு, பாகிஸ்தானை குறிப்பிட்டு மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
அந்த மிரட்டலில், "ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி வகையில், ஐபிஎல் தொடரை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும்; ரத்த ஆறு ஓடும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீசார் சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவல்லிக்கேணி போலீசார், மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் மிகுந்த போலீஸ் குவிப்பு ஏற்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustIn | சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!#SunNews | #ChepaukStadium | #BombThreat pic.twitter.com/hirdrZbnD0
— Sun News (@sunnewstamil) May 9, 2025