LOADING...
ரூ.15000 நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம் என்ன?
ரூ.15000 நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை

ரூ.15000 நெருங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை; இன்றைய விலை நிலவரம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
10:01 am

செய்தி முன்னோட்டம்

சமீப காலமாக தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் தங்க விலை, புதன்கிழமை (பிப்ரவரி 4) மீண்டும் அதிகரித்துள்ளது. புதன்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹630 அதிகரித்து ₹14,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹5,040 அதிகரித்து ₹1,19,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹689 அதிகரித்து ₹16,256 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹5512 அதிகரித்து ₹1,30,048 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலை ஏற்றம்

18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹540 அதிகரித்து ₹12,750 ஆகவும், ஒரு சவரன் ₹4,320 அதிகரித்து ₹1,02,000 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளி விலையும் புதன்கிழமை ஏற்றத்தை சந்தித்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹20 அதிகரித்து ₹320.00 ஆகவும், ஒரு கிலோ ₹3,20,000 ஆகவும் விற்பனை ஆகிறது. சர்வதேச சூழல் போன்ற காரணிகளால் தங்கம் வெள்ளி விலைகளில் தொடர்ந்து நிலையற்ற தன்மை நீடிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Advertisement