LOADING...
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து

மும்பை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து; நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2026
09:11 am

செய்தி முன்னோட்டம்

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. கோயம்புத்தூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம் (AI 2732), விமான நிலையத்தின் 'டாக்ஸிவே' (Taxiway) பகுதியில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய இண்டிகோ விமானம் (6E 791) தனது நிறுத்தத்தை நோக்கிச் சென்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு விமானங்களின் சிறகு முனைகளும் (Wing tips) ஒன்றோடொன்று உரசின.

விளக்கம்

விமான நிறுவனங்களின் விளக்கம்

ஏர் இந்தியா: "இந்த மோதலால் விமானத்தின் சிறகு பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் தரையிறக்கப்பட்டு, தொழில்நுட்பச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளது. இண்டிகோ: "பாதுகாப்பு நெறிமுறைகளின்படி உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் தற்போது பராமரிப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது," என்று இண்டிகோ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

விசாரணை

டிஜிசிஏ (DGCA) விசாரணை

விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் சரியாகச் சென்றனவா அல்லது சிக்னல் குறைபாடுகள் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement