சிரியாவில் அமெரிக்கா ராணுவம் தாக்குதல்; 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) அமெரிக்க இராணுவம், சிரியாவில் இந்த மாதம் இரண்டு வான்வழித் தாக்குதல்களில் 37 பயங்கரவாதிகளை கொன்றதாக அறிவித்துள்ளது. இதில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் சிரியாவை தளமாகக் கொண்ட ஹுராஸ் அல்-தின் என்ற அல் கொய்தாவின் துணை அமைப்பின் பல மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் இறந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா இதுகுறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், தாக்குதல்கள் செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறியது. மேலும் இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா நடத்திய தாக்குதல் விபரம்
அமெரிக்கா இந்த மாத தொடக்கத்தில் இருந்து செப்டம்பர் 16 அன்று ஒரு தாக்குதலை மேற்கொண்டனர். அதில் மத்திய சிரியாவில் உள்ள ஒரு தொலைதூரத்தில் உள்ள ஒரு ஐஎஸ்ஐஎஸ் பயிற்சி முகாம் மீது பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தினர். அந்த தாக்குதலில் குறைந்தது நான்கு சிரிய தலைவர்கள் உட்பட 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். "இந்த வான்வழித் தாக்குதல் அமெரிக்க நலன்களுக்கும், நமது நட்பு நாடுகளுக்கும் எதிராக செயல்படும் ஐஎஸ்ஐஎஸ் திறனை சீர்குலைக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிரியாவில் சுமார் 900 அமெரிக்க வீரர்கள் உள்ளனனர். மேலும் வெளியிடப்படாத எண்ணிக்கையிலான ஒப்பந்த ராணுவ வீரர்களும் உள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க இந்த ராணுவ வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.