Page Loader
அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 02, 2025
06:55 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டக்காரர்களின் கூட்டத்தை டிரக் மூலம் தாக்கி 15 பேரைக் கொன்றது மற்றும் டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஜனவரி 2) கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். மேலும், "நியூ ஆர்லியன்ஸில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த சோகத்திலிருந்து அவர்கள் குணமடையும்போது அவர்கள் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும்." என்று அவர் கூறினார். இதற்கிடையே, டிரம்ப் ஹோட்டலுக்கு அருகே டெஸ்லாவின் சைபர்ட்ரக் வெடித்ததும் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தள பதிவு