
ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை "ஆபரேஷன் சிந்தூர்" என்ற ராணுவ நடவடிக்கையின் கீழ் தாக்கியது.
இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம், ரபேல் ஜெட் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள் மற்றும் ஹேமர் குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி துல்லிய தாக்குதல் நடத்தியதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
உயர்தர ஆயுதங்கள்
உயர்தர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட தாக்குதல்
இந்திய விமானப்படையின் ரபேல் விமானங்கள், அதிக துல்லியத் தாக்குதல் திறன் கொண்ட ஸ்கால்ப் ஏவுகணைகளை கொண்டு குறிவைத்த இலக்குகள் மீது தாக்குதல் நடத்தின.
இந்த ஏவுகணைகள் 250 கிமீக்கும் மேலான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டவை. ஹேமர் (HAMMER) குண்டுகள், 50-70 கிமீ வரையிலான துல்லியத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் உயர்நுட்ப ஆயுதங்கள்.
இவை லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளின் தலைமையகங்களை குறிவைத்து பயன்படுத்தப்பட்டன.
ஹேமர் குண்டுகள் பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
இந்திய ராணுவம் இந்த தாக்குதலை விமானப்படையுடன் மட்டுமல்ல, இந்திய கடற்படையின் ஒத்துழைப்போடும் நடத்தியுள்ளது. வான்வழி மட்டுமல்ல, கடல்வழியும் பயன்படுத்தப்பட்ட இந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் மொத்தமாக அழிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | பிரான்ஸில் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்.#SunNews | #OperationSindoor | #PahalgamTerroristAttack pic.twitter.com/6BGaSyPZtj
— Sun News (@sunnewstamil) May 7, 2025