
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் நடந்த தீவிர தாக்குதலுக்கு எதிராக, இந்திய ராணுவம் வீரத்துடன் போராடி வரும் நிலையில், நாட்டின் ஒற்றுமையையும், ராணுவத்துக்கு உள்ள ஆதரவும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என முதலமைச்சர் கூறினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் நாளை மாலை 5 மணிக்கு, சென்னை காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பேரணி துவங்கும், மெரினா கடற்கரையில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே நிறைவடையும்.
முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாடு அரசின் பேரணியில் பங்கேற்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் அழைப்பு#SunNews | #OperationSindhoor | #CMMKStalin | #IndianArmy pic.twitter.com/RFDRB0ya3n
— Sun News (@sunnewstamil) May 9, 2025