
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் ஆண்டனி இரங்கல் தெரிவித்து அறிக்கை
செய்தி முன்னோட்டம்
நாட்டையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் ஆண்டனி வெளியிட்ட ஒரு அறிக்கையில், "காஷ்மீரில் உயிர் இழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே சமயம் பாகிஸ்தானில் வாழும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும் நம்மைப் போல அமைதியையும் வளர்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்." என தெரிவித்துள்ளார்.
பஹல்காம்
பஹல்காம் சம்பவத்தின் பின்னணி
ஜம்மு காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் சமீபத்தில் தீவிரவாதிகள், சுற்றுலா சென்ற மக்களை, குறிப்பாக அவர்களை மதம் பார்த்து தாக்கியுள்ளது.
இதில் 26 பேர் இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலர்களின் எண்ணிக்கையையும் குறைத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.