நியூ ஆர்லியன்ஸ் தீவிரவாத தாக்குதல்: டிரக்கில் இருந்து FBI கண்டுபிடித்தது என்ன?
செய்தி முன்னோட்டம்
புத்தாண்டு தினத்தன்று நியூ ஆர்லியன்ஸ் தாக்குதலில் ட்ரக்கை ஒட்டி வந்த நபரின் அடையாளத்தை சட்ட அமலாக்க அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
எஃப்.பி.ஐ வெளிப்படுத்திய முதற்கட்ட விவரங்கள், 15 பேரைக் கொன்றதற்கும், டஜன் கணக்கானவர்களைக் காயப்படுத்தியதற்கும் காரணமான ட்ராக் ட்ரைவரின் பெயர் ஷம்சுத் தின் ஜப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 வயதான அந்த நபர் முடிந்தவரை பலரைக் கொல்வதாக முடிவெடுத்தே வாகனத்தை ஒட்டி வந்ததாக அதிகாரிகள் முன்பு தெரிவித்துள்ளார்.
அந்த நபர் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். எனினும் அவரை பற்றிய அடையாளங்களும், விவரங்களும் விசாரணையில் வெளி வந்துள்ளது.
விவரங்கள்
நியூ ஆர்லியன்ஸ் தாக்குதல் நடத்திய ஷம்சுத் தின் ஜப்பார் யார்?
தி சன் படி, முதற்கட்ட அடையாள அறிக்கையின்படி, ஜப்பார் 42 வயதான அமெரிக்க குடிமகன். டெக்சாஸில் பிறந்து வளர்ந்த இவர், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றினார்.
புத்தாண்டு தினத்தன்று அவர் நடத்திய தாக்குதலில் பலர் இறந்த நிலையில், அவரை இடைமறித்த காவல்துறையினரையும் அவர் அவர் தாக்கியதில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலின் போது இரண்டு அதிகாரிகள் காயமடைந்தனர்.
அவர் ஓட்டிச் சென்ற டிரக்கின் பின்புறத்தில் கருப்பு ஐ.எஸ்.ஐ.எஸ் கொடி காணப்பட்டதாக NOLA.com செய்தி வெளியிட்டுள்ளது.
இது சம்பவத்தின் பயங்கரவாத தொடர்புகள் குறித்த சந்தேகங்களை மேலும் தூண்டுகிறது.
விசாரணை
வழக்கை கையிலெடுத்த FBI - ட்ராக் ட்ரைவர் தீவிரவாதியா என விசாரித்து வருகிறது
FBI நியூ ஆர்லியன்ஸின் பிரெஞ்சு குவார்ட்டர்ஸில் புத்தாண்டு தினத் தாக்குதலை விசாரித்து வருகிறது.
FBI இந்தத் தாக்குதலை ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதுகிறது மற்றும் ஓட்டுநர் தனியாகச் செயல்படவில்லை என்று நம்புகிறது.
மேலும் அந்த இடத்தை சல்லடை போட்டதில், பிரெஞ்சு குவார்ட்டர்ஸில் ஓரிரு இடங்களில் வெடிபொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என FBI கூறியது.
அசோசியேட்டட் பிரஸ் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, லூசியானா மாநில காவல்துறை உளவுத்துறை புல்லட்டின் படி, மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் பல மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்களில் ஒன்றை வைப்பதை CCTV காட்சிகள் காட்டியது.
எனவே இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கக்கூடும் என FBI சந்தேகிக்கிறது.
கண்டுபிடிப்பு
அதிகாரிகள் தங்கள் விசாரணையில் கண்டுபிடித்தது என்ன?
சந்தேக நபரின் ட்ரக் வாகனத்தில் துப்பாக்கிகள் மற்றும் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில காவல்துறை புல்லட்டின் தெரிவித்துள்ளது.
இந்த பொருட்கள் கூலருக்குள் மறைத்து வைக்கப்பட்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க வசதியாக வயரிங் செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
அந்த ரிமோட் கூட வாகனத்தில் காணப்பட்டது என்று செய்தியறிக்கை கூறுகிறது.