ஐ.எஸ்.ஐ.எஸ்: செய்தி
கேரளா: 16 வயது மகனை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரத் தூண்டிய தாய் மீது UAPA வழக்கு பதிவு
கேரளாவில் பதினாறு வயது இளைஞரை தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பில் சேருமாறு தூண்டியதாக, அவரது தாய் மற்றும் அவரது பார்ட்னர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான UAPA (Unlawful Activities Prevention Act)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மாலில் வெடிகுண்டு வைக்க சதி செய்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் 2 பேர் கைது
தீபாவளி பண்டிகை காலத்தின்போது டெல்லியில் அதிக மக்கள் கூடும் பகுதிகளில், குறிப்பாக தென் டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான வணிக வளாகம் மற்றும் பொதுப் பூங்காவில், குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் ISIS அமைப்பை சேர்ந்த இருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய பிரிவு முன்னாள் தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தடைசெய்யப்பட்ட இந்திய மாணவர்கள் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) முன்னாள் மூத்த நிர்வாகியும், இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுபவருமான சாகிப் நாச்சன், மூளை ரத்தக்கசிவு காரணமாக டெல்லியின் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சனிக்கிழமை (ஜூன் 28) பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 57.
ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது
தெலுங்கானா காவல்துறை, ஆந்திரப் பிரதேச காவல்துறையுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த மிகப்பெரும் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தாவிலிருந்து இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது: FATF
உலகளாவிய பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி அமைப்பு, நிதி நடவடிக்கை பணிக்குழு (FATF), இந்தியா "வேறுபட்ட" பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்று எச்சரித்துள்ளது, குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இயங்கும் இஸ்லாமிய அரசு (ISIS) மற்றும் அல் கொய்தாவுடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து.
ISIS தலைவர் அல்-பாக்தாதியின் விதவைக்கு மரண தண்டனை விதித்த ஈராக் நீதிமன்றம்
மறைந்த இஸ்லாமிய அரசு தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதியின் விதவை அஸ்மா முகமதுவுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தாக்குதல் நடத்தப்படும் என ஐ.எஸ்.ஐ.எஸ் எச்சரிக்கை
யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் என்ற பிரபல கால்பந்தாட்ட போட்டி தொடரின் காலிறுதி சுற்றின் போது, தாக்குதல் நடத்தப்படும் என பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் விடுத்துள்ளது.
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்
கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, 133 பேரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
ஈரானில் இரட்டை குண்டுவெடிப்புகளால் தாக்கப்பட்ட காசிம் சுலைமானி கல்லறை- யார் அவர்?
ஈரானின் புரட்சிகர காவல் படை தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவினால் கொல்லப்பட்ட நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நிகழ்த்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 95 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு
சிரியாவின் வடமேற்கு பகுதியில் நடந்த ஒரு தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத குழுவின் தலைவர், அபு அல்-ஹுசைன் அல்-குராஷி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.